நடுங்க வைத்த நிலநடுக்கம், சுனாமி... இந்தோனேசியாவில் 1350 பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1350 க்கும் மேலாக அதிகரித்துள்ளது. வரலாற்றிலே இதுபோன்ற ஒரு பேரிடர் ஏற்பட்டதில்லை என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
 | 

நடுங்க வைத்த நிலநடுக்கம், சுனாமி... இந்தோனேசியாவில் 1350 பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1350 ஆக அதிகரித்துள்ளது. வரலாற்றிலே இதுபோன்ற ஒரு பேரிடர் ஏற்பட்டதில்லை என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 

இந்தோனேசியாவில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலையில், முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு திரும்பபெறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரா நேரத்த்தில் கடல் அலைகள் மேலெழுந்தன. திடீரென ஏற்பட்ட சுனாமியில் கடற்கரையோரங்களில் அமைந்திருந்த குடியிருப்புகள், ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலு, டோங்கலா ஆகிய பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

நடுங்க வைத்த நிலநடுக்கம், சுனாமி... இந்தோனேசியாவில் 1350 பேர் பலி!

கடந்த சில நாட்களாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தற்போது உயிர்பலி எண்ணிக்கை 1350 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் குவித்துவைக்கப்பட்டு புதைக்கப்படுகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர். தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. 

கொடூரமான ஒரு பேரிடரை சந்தித்துள்ள இந்தோனேசியாவுக்கு பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP