தீவிரவாத தாக்குதல் அதிகம் நடைபெற்றுள்ள 5 நாடுகள் எவை தெரியுமா?

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ் ஆகிய 5 ஆசிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக நடைபெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், பயங்கரவாதம் 23% குறைந்துள்ளது. எனவும் கூறியுள்ளது.
 | 

தீவிரவாத தாக்குதல் அதிகம் நடைபெற்றுள்ள 5 நாடுகள் எவை தெரியுமா?

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக நடைபெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

சர்வதேச நாடுகளில் பயங்கரவாதம் குறித்து அமெரிக்க அமைப்பு ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2017ம் ஆண்டில் சர்வதேச நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் அடிப்படையில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. 

அதில்,  " உலகில் 100 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ் ஆகிய 5 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகமாக நடைபெற்றுள்ளன. இவையனைத்தும் ஆசிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5 நாடுகளில் மட்டும் 59% அளவுக்கு பயங்கரவாதம் நடந்துள்ளது. 

அதேபோன்று பயங்கரவாதத்தில் அதிகமான மக்கள் உயிரிழப்பு என்பது ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன. ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய இயக்கங்கள் தான் அதிகமாக தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஆனால் அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், பயங்கரவாதம் 23% குறைந்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP