28 ஆண்டுகளாக ண்ணின் மேற்புறத்தில் இருந்த காண்டாக்ட் லென்ஸ் - அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்

பிரிட்டனை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரின் கண்ணில் 28 ஆண்டுகளாக சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு குணமாகியுள்ளார்.
 | 

28 ஆண்டுகளாக ண்ணின் மேற்புறத்தில் இருந்த காண்டாக்ட் லென்ஸ் - அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்

பிரிட்டனை சேர்ந்த 42 வயதுடைய பெண் தனது இடது கண்ணில் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு வந்துள்ளார். வீக்கத்தின் காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கண்ணை ஸ்கேன் செய்த டாக்டர்கள்  அதிர்ச்சியடைந்தனர். அப்பெண்ணின்  இடது கண்ணின் மேற்புறத்தில் சுமார் 8 மிமீ அளவுடைய காண்டாக்ட் லென்ஸ் சிக்கியிருந்தது தெரிந்தது.

இது குறித்து, அப்பெண்ணிடம் டாக்டர்கள் விசாரித்த போது, " சிறுவயதில் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு பேட்மிட்டன் விளையாடிய போது பந்து இடது கண்ணின் மீது பட்டது. அதில், கண்ணில் இருந்த லென்ஸ் கீழே விழுந்துவிட்டதாக எண்ணி விட்டுவிட்டதாக கூறினார்".         

இதனை தொடர்ந்து, மருத்துவ குழு அறுவை சிகிச்சை மூலம் காண்டாக்ட் லென்சை நீக்கினர். இது குறித்து பேசிய மருத்துவர், லென்ஸ் கீழே விழாமல் 28 ஆண்டுகளாக அவரது கண்ணின் மேற்புறத்தில் சிக்கி இருந்துள்ளது. வலி போன்ற எவ்வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இவ்வளவு ஆண்டுகளாக அவரது கண்ணிலேயே லென்ஸ் சிக்கி இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அறுவை சிகிச்சை மூலம் தற்போது  காண்டாக்ட் லென்ஸ் நீக்கப்பட்டு, தற்போது அவர் குணமாகி வருகிறார் என தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP