அதிசயமா.... தவறா? தாய் ஒன்று, தந்தை இரண்டு, இரட்டை குழந்தைகள்!

சீனாவில் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளின் மரபணு (DNA) வேறுபட்டிருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதையடுத்து நடைபெற்ற விசாரணையில் குழந்தைகளின் தாய், கணவர் மற்றும் வேறு ஒருவருடன் ஒரே நேரத்தில் தொடர்பில் இருந்ததை ஒத்துக்கொண்டார்
 | 

அதிசயமா.... தவறா? தாய் ஒன்று, தந்தை இரண்டு, இரட்டை குழந்தைகள்!

சீனாவில் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளின் மரபணு (DNA) வேறுபட்டிருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

சீனாவின் சியாமின் நகரில் கடந்தாண்டு ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. பிறந்த குழந்தைகள் உருவத்தில் மாறுபட்டிருந்ததால் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனினும் இது குறித்து அவர் தனது மனைவியிடம் ஏதும் கேட்கவில்லை.

இந்நிலையில் சீனாவில் உள்ள சட்டப்படி குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பின் அந்த குழந்தையை காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு குழந்தை பிறந்த போது கொடுத்த மருத்துவ அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

அதன்படி குழந்தையின் மருத்துவ அறிக்கையை மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போது இரண்டு குழந்தைகளுக்கும் மரபணு வேறுபட்டிருந்தது தெரியவந்தது. இதனால் காவல் நிலையத்தில் இருந்த கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மனைவியால் உண்மையை மறைக்க முடியவில்லை. அவர் ஒரு குழந்தை வேறு ஒரு நபருக்கு பிறந்தது என்பதை ஒப்புக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் தனக்கு பிறந்த குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP