உய்கர் முஸ்லிம்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து சவூதி இளவரசரின் கருத்து இது!!

சீனாவில் உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறித்து சவூதி இளவரசர் கருத்து கூறுகையில், “தேசப் பாதுகாப்பு கருதி தீவிரவாதத்துக்கு எதிரான, மத அடிப்படைவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சீனாவுக்கு முழு உரிமை உண்டு’’ என்றார் .
 | 

உய்கர் முஸ்லிம்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து சவூதி இளவரசரின் கருத்து இது!!

சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து சவூதி இளவரசர் மிகக் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர் மாறான கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். தேசப் பாதுகாப்பு சீனாவின் உரிமை எனக் கூறியுள்ளார் அவர்.

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியிலும், மத்திய சீனா உள்ளிட்ட இடங்களிலும் உய்கர் இன முஸ்லிம்கள் வாழுகின்றனர். அவர்களில் பலர் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், மத அடிப்படைவாத கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் சீன அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், உய்கர் இன முஸ்லிம்கள் 10 லட்சம் பேரை பிடித்து தடுப்புக் காவல் மையத்தில் சீனா தங்க வைத்துள்ளது. அங்கு அவர்கள் 5 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும். ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. அவர்கள் முழுமையாக சீன கலாசாரத்துக்கு மாற வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இந்நிலையில், முஸ்லிம் மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், அரசு முறைப் பயணமாக சீனா சென்றார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து சல்மானிடம் உய்கர் இனத் தலைவர்கள் முறையிட்டிருந்தனர். இத்தகைய சூழலில், சீனாவின் கட்டுப்பாடுகள் குறித்து தனது கருத்தை சல்மான் தெரிவித்தார். “தேசப் பாதுகாப்பு கருதி தீவிரவாதத்துக்கு எதிரான, மத அடிப்படைவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சீனாவுக்கு முழு உரிமை உண்டு’’ என்றார் அவர்.

இதற்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதுகுறித்து கருத்து கூறியபோது, சீனா விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து தமக்கு அவ்வளவாக தெரியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP