சீனாவில் திறக்கப்பட்டுள்ள ஐஸ் உணவகம்

சீனாவின் ஹார்பின் நகரில் பனிக்கட்டிகளால் ஆன உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் இந்த உணவகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இந்த ஐஸ் உணவகம் மார்ச் மாதம் வரை திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
 | 

சீனாவில் திறக்கப்பட்டுள்ள ஐஸ் உணவகம்


சீனாவின் ஹார்பின் நகரில் பனிக்கட்டிகளால் ஆன உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் இந்த உணவகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

சீனாவில் 35-வது சர்வதேச பனிச்சிற்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அழகிய பனிச்சிற்பங்கள், வண்ண விளக்கொளியில் மின்னுகிறது.

 இது சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹார்பின் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பனிச்சிற்ப தொடக்க திருவிழாவில்  வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பனிக்கட்டிகளால் ஆன உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டது. 

-5 டிகிரியாக இருக்கும் உணவகத்தின் வெப்பநிலையில் சுடச்சுட உணவை உண்பது புதிய அனுபவத்தை தருவதாக சுற்றுலா பயணிகள் தெருவித்துள்ளனர். இந்த ஐஸ் உணவகம் மார்ச் மாதம் வரை திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP