எலியால் பரவும் ஹெச்ஈவி வைரஸ் !

உலகிலேயே முதன்முறையாக, ஹாங்காங்கைச் சேர்ந்த நபர் எலியின் கழிவு கலந்த உணவை உட்கொண்டதன் மூலம், ஹெபடைடிஸ் ஈ வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்ர. இதனை ஹெச்ஈவி (HEV) வைரஸ் என்று கூறுவர்
 | 

எலியால் பரவும் ஹெச்ஈவி வைரஸ் !

உலகிலேயே முதன்முறையாக, ஹாங்காங்கைச் சேர்ந்த நபர் எலியின் கழிவு கலந்த உணவை  உட்கொண்டதன் மூலம், ஹெபடைடிஸ் ஈ வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்ர. இதனை ஹெச்ஈவி (HEV) வைரஸ் என்று கூறுவர். பாதிக்கப் பட்ட அந்த நபருக்கு  56 வயது என தெரியவந்துள்ளது.

இவரது கல்லீரல் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். எலியின் கழிவு மூலமாகவும் மனிதருக்கு ‘ஹெபடைடிஸ் ஈ’ வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இந்த கல்லீரல் பாதிப்பால் வருடத்திற்கு சுமார் 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. 

குடிநீர் மூலமாக இந்த வைரஸ் பரவும் என்று கூறப்படுகிறது. காய்ச்சல், வாந்தி, மஞ்சக்காமாலை போன்ற அறிகுறிகள் வைத்து இந்த ‘ஹெபடைடிஸ் ஈ’ வைரஸ் பரவியுள்ளதை கண்டறியலாம். உணவுப் பொருட்களைத் திறந்து வைத்திருக்கும் பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்நிலையில் ‘ஹெபடைடிஸ் ஈ’ வைரஸ்ஸினால் பதிக்கப்பட்ட அந்த நபருக்கு தீவிர சிக்கிச்சை அழிக்கப்பட்டு வருகிறது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP