சீனாவில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து - 4 பேர் பலி

சீனாவில் அலுமினிய தாது பொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிாிழந்தனா்.
 | 

சீனாவில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து - 4 பேர் பலி

சீனாவில் அலுமினிய தாது பொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிாிழந்தனா்.

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினிய தாது பொருள் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோங்யி நகர் அருகே சரக்கு ரெயில் வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.

தகவலறிந்து அங்கு வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. சரக்கு ரயில் தடம் புரண்டதால அந்த வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP