விமானமா? கப்பலா? குழம்ப வைக்கும் சீனர்கள்!

நீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனா தயாரித்துள்ளது. மேலும் கப்பலா அல்லது விமானமா என குழப்பமடைய வைக்கும் இந்த விமானத்தின் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.
 | 

விமானமா? கப்பலா? குழம்ப வைக்கும் சீனர்கள்!

நீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனா தயாரித்துள்ளது. மேலும் இது கப்பலா அல்லது விமானமா என குழப்பமடைய வைக்கும் இந்த விமானத்தின் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

கடலில் ஆபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான ஏஜி 600 என்ற விமானத்தை சீனா தயாரித்தது. நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையிலான இந்த விமானம், நீரில் மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது என சீனா தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த விமானம், சீனாவின் ஹீபே மாகாணத்தின் ஜிங்மென் பகுதியில் இருந்து முதல்முறையாக வானில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர், விமானம் வெற்றிகரமாக நீரில இறக்கியும்  சோதிக்கப்பட்டது. இது சீனாவின் 3-வது மிகப்பெரிய விமானம் ஆகும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP