சீனாவில் காட்டுத் தீயை அணைக்க முற்பட்ட 26 தீயணைப்பு வீரர்கள் பலி!

சீன நாட்டில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட, 26 தீயணைப்புப்படை வீரர்கள் தீயில் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் (Sichuan) வனப்பகுதியில் இரு தினங்களுக்கு முன்னதாக, திடீரென காட்டுத்தீ பரவியது. இதையடுத்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று பிற்பகல் வரை தீயை அணைக்கும் பணி சரியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதுவரை வீரர்களை தொடர்புகொள்ள முடிந்தது. அதன்பின்னர் அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, இன்று இரண்டு வீரர்களின் தொடர்பு கிடைத்த நிலையில், நேற்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 26 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திடீரென காற்றின் திசை மற்றும் வேகம் மாறியதனால், எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. .

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP