சீன ரசாயன தொழிற்சாலை வெடிவிபத்து; 78 பேர் பலி

சீனாவின் ஜியாங்சு பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
 | 

சீன ரசாயன தொழிற்சாலை வெடிவிபத்து; 78 பேர் பலி

சீனாவின் ஜியாங்சு பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 21ம் தேதி, சீனாவின் ஜியாங்சு பகுதியில், உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பல கிமீ தூரத்தில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன.

இந்த விபத்தில் 47 பேர் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொழிற்சாலையின் அருகே 2 கிமீ சுற்றளவு பகுதிகளில் இருந்து பலியானவர்களின் உடல்களை கண்டுபிடித்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

அதில் 56 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. சம்பவத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP