சீனா- கூட்டத்திற்குள் கார் புகுந்து 6 பேர் பலி

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் அதி வேகத்தில் வந்த கார் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கார் ஓட்டுநரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
 | 

சீனா- கூட்டத்திற்குள் கார் புகுந்து 6 பேர் பலி

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் அதி வேகமாக வந்த கார் புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கார் ஓட்டுநரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சோயாங் நகரத்தில் இன்று, மக்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் பயங்கர வேகத்தில் புகுந்தது. கார் தொடர்ந்து நிற்காமல் அங்கு நின்ற மக்கள் மீது மோதிக்கொண்டு சென்றதில், 6 பேர்  உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். கார் தொடர்ந்து நிற்காமல் சென்றதையடுத்து, போலீசார் காரின் ஓட்டுநரை சுட்டுக்கொலை செய்தனர். 

சமீப காலமாக சீனாவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூனான் மாகாணத்தில் உள்ள பொதுஇடத்தில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது. இதில், 11 பேர் பலியாகினர்.

இதையடுத்து காரின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். வஞ்சக நோக்கத்துடன் திட்டமிட்டு காரை மக்கள் கூட்டத்திற்குள் செலுத்தியதாக போலீசார், காரை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர்.

அதேபோல், நவம்பரிலும் ஆரம்ப பள்ளி வாயில் முன்பு உள்ள தெருவை கடந்து சென்ற பள்ளி சிறார்கள் மீது, கார் மோதியதில் 5 சிறார்கள் பலியாகினர். 19 பேர் காயம் அடைந்தனர். தற்கொலை எண்ணத்தில் சென்றபோது, இந்த தாக்குதலை நடத்தியதாக காரின் ஓட்டுநர் தெரிவித்ததாக பின்னர் தகவல் வெளியானது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP