பட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா

சீனாவின் ஹோஹாட் நகரில் வசித்து , அங்கு பணியில் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு சீன அரசு பாதி விலையில் வீடு வழங்க உள்ளது.
 | 

பட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா


சீனாவின் ஹோஹாட் நகரில் வசித்து, அங்கு பணியில் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு சீன அரசு பாதி விலையில் வீடு வழங்க உள்ளது.

சீனாவில் வளர்ந்து வரும் தொழில் நகரமான ஹோஹாட் நகரம் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல புதிய தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உருவாகி வருகின்றன. இங்கு வசிப்பதற்கு தேவையான குடியிருப்புகள் கிடைப்பதில் நிலவி வரும் இடப்பற்றாக்குறை காரணமாக பெரும்பாலானோர் இந்த ஊரில் பணி  செய்ய விரும்புவதில்லை. அதனால் இங்கு பொறியாளர்கள் உள்ளிட்ட பல பட்டதாரிகள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

எனவே அவர்களை இளைஞர்களை இங்கு வந்து பணி புரிய வகை செய்யும் வகையில் பல குடியிருப்புக்களை இந்த நகராட்சி அமைக்க உள்ளது. அந்த குடியிருப்புக்களை ஹோஹாட்  நகரிலேயே வசித்து அங்கேயே பணி புரியும் பட்டதாரிகளுக்கு பாதி விலையில் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த குடியிருப்பு ஒவ்வொன்றும் சுமார் 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

இது போல் எத்தனை குடியிருப்புக்கள் அமைக்கப்பட உள்ளன என்பது குறித்து இன்னும் அரசு அறிவிக்கவில்லை. இந்த குடியிருப்புக்கள் விற்பனை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளன.

இந்த சலுகையை பெற விரும்புவோர் இதே நகரில் தங்கி பணி புரிய வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட நபரின் பெயரில் ஏற்கனவே சொத்து இருக்கக் கூடாது. இவ்வாறு மாநகராட்சி வழங்கும் குறைந்த விலை வீடுகளை இன்னும் ஐந்து வருடங்களுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது.

இவ்வாறு தங்கள் பணத்தை வீடுகளில் முடக்க விரும்பாதோருக்கு இரு வருடங்களுக்கு வாடகை இல்லா குடியிருப்புக்கள் வழங்க அரசு உத்தேசித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP