30 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் வனம்.. எங்குள்ளது தெரியுமா?

சீனாவின் யுனான் மாகாணத்தில் ஷிலின் என்ற இடத்தில் சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த கல் வனம் பரந்து விரிந்துள்ளது. ஷிலின் என்ற சீன மொழிச் சொல்லுக்கு நேரடிப் பொருள் கல் வனம் என்பதுதான்.
 | 

30 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் வனம்.. எங்குள்ளது தெரியுமா?

கல் மரம் என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது, கல்லால் வடிவமைக்கப்பட்ட மரம், பொம்மையால் செய்யப்பட்ட மரம் என்று நினைபோம். அல்லது நம் நாட்டில் பெரும்பாலான இடங்களில்  ஒரு சில கல் மரங்கள் காட்சிக்கு வைத்திருப்பார்கள். ஆனால் கல் மரத்தால் ஆன ஒரு பெரிய காடு உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறது. வாருங்கள், சீனாவின் யுனான் மாகாணத்தில் ஷிலின் என்ற இடத்தில் சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த கல் வனம் பரந்து விரிந்துள்ளது. ஷிலின் என்ற சீன மொழிச் சொல்லுக்கு நேரடிப் பொருள் கல் வனம் என்பதுதான். 

30 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் வனம்.. எங்குள்ளது தெரியுமா?

பெயருக்கேற்ப இங்கு பெரிய பெரிய மரங்கள் போல் நிமிர்ந்து நிற்கும் ஏராளமான கற்கள் உள்ளன.  இந்த பகுதியை ஷிலின் என்றும் அழைக்கப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் மரங்களைப்போல் தோன்றும் இவை, அருகில் வந்து பார்க்கும்போதுதான் கற்கள் என்பது தெரியவரும். இந்தக் கல் மரங்கள் அனைத்துமே லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக் கற்கள் மற்றும் கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுப் பொருட்கள் மிகுந்திருக்கும் டோலோமைட் ஆகிய கற்களால் ஆனவை. 

30 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் வனம்.. எங்குள்ளது தெரியுமா?

இந்தக் கற்கள் அனைத்தும் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவையாக இருக்கலாம் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் சுண்ணாம்புக் கல் மலையாகக் கிடந்த இந்தப் பகுதியில், தண்ணீராலும் காற்றாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏற்பட்ட அரிப்பு காரணமாக, பல இடங்களில் சுண்ணாம்புக் கற்கள் கரைய நேர்ந்ததால், இயற்கையாகவே மரங்கள் நிறைந்த வனம் போன்ற தோற்றம் உருவானதாக கூறப்படுகிறது. 

மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த ஷிலின் பகுதியில் இரு வேறு கல் வனங்கள், குகைகள், ஏரிகள் மற்றும் அருவி என மொத்தம் ஏழு இயற்கை வனப்பு மிக்க இடங்கள் உள்ளன. இவற்றில் நைகு ஸ்டோன் ஃபாரஸ்ட் என்ற பகுதியையும் அதன் அருகில் உள்ள இயற்கை வளம் மிகுந்த சூஜெயி கிராமத்தையும் உலகப் பாரம்பரியத் தலமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அத்துடன் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் ஷிலின்   வகைப்படுத்தப்பட்டுள்ளது.

30 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் வனம்.. எங்குள்ளது தெரியுமா?

ஷிலின் கல் வனத்தில் உள்ள கற்களில், அஷிமா என்று பெயர்சூட்டப்பட்டுள்ள கல், மிகவும் முக்கியத்துவம் வாயந்த தாம்.  ஏனெனில் இது கல் அல்ல, கல்லாக உருமாறிய பெண் என்பது இப்பகுதி பூர்வகுடி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. யீ என்ற பூர்வகுடியைச் சேர்ந்த அஷிமா என்ற இளம் பெண், தான் காதலித்த இளைஞரைத் திருமணம் செய்து கொள்ள இயலாததால், இவ்வாறு கல்லாக உருமாறியதாக இப்பகுதியில் நிலவும் புராணக் கதையொன்று கூறுகிறது. இதை நினைவுகூரும் வகையில் யீ பழங்குடி இன மக்கள், ஆண்டுதோறும் இந்த அஷிமா கல் அருகே, ஹ்யூபா ஜீ என்ற தீப்பந்தத் திருவிழாவை நடத்துகின்றனர். 

அப்போது தீப்பந்தங்களை ஏந்தியபடி பாரம்பரியச் சடங்குகளைச் செய்கின்றனர். மேலும் நாட்டுப்புற நடனங்களை இவர்கள் ஆடுவதோடு, விறுவிறுப்பான மல்யுத்தப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. எருதுச் சண்டை, கம்பத்தின் மேல் ஏறுதல், பாரம்பரிய சிங்க நடனப் போட்டி, டிராகன் வடிவ பட்டங்களைப் பறக்கவிடுதல் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளும் அப்போது களைகட்டும். இந்த ஷிலின் பகுதியில், பூமிக்கடியில் ஓடும் பாதாள நதியும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் இடமாக உள்ளது. கல்லிலே மாமனிதர்கள் செயற்கையாகப் படைத்துள்ள கலை வண்ணங்களை, மாமல்லபுரம், அஜந்தா, எல்லோரா உள்ளிட்ட நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாம் கண்டுகளிக்கலாம். இருப்பினும் இயற்கையே கற்களில் உருவாக்கியுள்ள கலைவண்ணத்தைக் காண வேண்டுமானால், அண்டை நாடான சீனாவுக்குத்தான் நாம் செல்ல வேண்டும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஷிலின் கல் வனத்துக்கு வருகின்றனர். 

ஷிலின் கல் வனத்திற்க்கு செல்லும் வழி :
யுன்னான் மாகாணத் தலைநகரான குன்மிங் நகரில் இருந்து ஏராளமான ஷிலின் கல் வனப்  பகுதிக்கு பேருந்துகள் வசதிகள் உள்ளன. சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஷிலின் கல் வனத்தை, பேருந்து மூலம் ஒன்றரை மணி நேரத்தில் சென்றடையலாம். 

குன்மிங்கில் இருந்து ரயில் வசதியும் உண்டு. சாதாரண ரயில் என்றால் 2 மணி நேரமும், அதிவேக ரயில் என்றால் வெறும் 20 நிமிடமும் மட்டுமே அகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP