கனடாவிடம் தஞ்சம் கோரும் சவுதி இளம்பெண்!

சவுதியில் இருந்து தப்பி தாய்லாந்துக்கு வந்து, தன்னை திருப்பி அனுப்பக் கூடாது என சமூக வலைத்தளங்களில் கோரி பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண், கனடா நாட்டில் தஞ்சம் கோரியுள்ளார்.
 | 

கனடாவிடம் தஞ்சம் கோரும் சவுதி இளம்பெண்!

சவுதியில் இருந்து தப்பி தாய்லாந்துக்கு வந்து, தன்னை திருப்பி அனுப்பக் கூடாது என சமூக வலைத்தளங்களில் கோரி பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண், கனடா நாட்டில் தற்போது தஞ்சம் கோரியுள்ளார்.

சவுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ரஹப் முஹம்மது அல்-கனன். இவர் தனது குடும்பத்தினருடன், குவைத்துக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அவர்களிடம் இருந்து தப்பி தாய்லாந்து வந்தடைந்தார். ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த அவரை, தாய்லாந்து அதிகாரிகள் திருப்பி சவுதிக்கு அனுப்ப முயற்சித்தனர். ஆனால், தனக்கு திரும்ப செல்ல இஷ்டமில்லை என்றும், அனுப்பப்பட்டால், இஸ்லாமிய மதத்தை துறந்ததற்காக தனது பெற்றோர்கள் சித்தரவதை செய்வார்கள், என்றும் அவர் கோரினர். இதையடுத்து அவருக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆதரவு எழுந்தது. அவரை திருப்பி அனுப்ப மாட்டோம், என தாய்லாந்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், அவர் நிரந்தரமாக தங்கள் நாட்டில் தங்க முயற்சித்ததை தெரிந்துகொண்ட ஆஸ்திரேலியா அரசு, அவருக்கு வழங்கியிருந்த விசாவை ரத்து செய்தது. இந்த விவகாரத்தில், இளம்பெண்ணை சவுதிக்கு திருப்பி அனுப்பக்கூடாது என கனடா நாடு கடுமையாக வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தனக்கு கனடா தஞ்சம் அளிக்க வேண்டும் என அல்-கனன் தற்போது கோரியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP