அமெரிக்க பொருட்களுக்கு பன்மடங்கு இறக்குமதி வரி: கனடா பதிலடி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரியை கனடா அதிகரித்துள்ளது. இந்த வரி விதிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
 | 

அமெரிக்க பொருட்களுக்கு பன்மடங்கு இறக்குமதி வரி: கனடா பதிலடி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரியை கனடா அதிகரித்துள்ளது. இந்த வரி விதிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்தும் நடைமுறையில் இருக்கும் சலுகைகளை ரத்து செய்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். 

இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், அது ஏற்க முடியாத அளவில் இருப்பதாகவும், தங்களது தொழிலாளர்கள் மீது தங்களுக்கும் அக்கறை இருப்பதாக கடுமையாக பேசினார். 

இந்த நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, வரி விதிக்கப்படும் பொருட்களுக்கான பட்டியலை கனடா வெளியிட்டுள்ளது. இதில், சில பொருட்களுக்கான வரிப்பட்டியல் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா ஒரு போதும் பின்வாங்காது என்றும் வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

கனடாவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களை குறிவைத்தே இருக்கின்றன. அமெரிக்காவில்  தயாரிக்கப்படும் யோகர்ட், கெட்ச் அப் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகியவையும் இதில் அடங்கும். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் பெரு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. ஆனால் இவை அனைத்தையும் பாதிக்கும் அளவுக்கு இந்த வர்த்தகப் போர் இட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP