கனடா பிரதமர் அத்துமீறினார்!- நிருபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஜஸ்டின் ட்ரூடோ மறுப்பு 

பெண் நிருபரிடம் தான் அத்துமீறியதாக கூறப்படுவது குறித்து தனக்கு எந்த நினைவும் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
 | 

கனடா பிரதமர் அத்துமீறினார்!-  நிருபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஜஸ்டின் ட்ரூடோ மறுப்பு 

பெண் நிருபரிடம் தான் அத்துமீறியதாக கூறப்படுவது குறித்து தனக்கு எந்த நினைவும் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

இதற்கு பொறுமையாக பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தாக தனக்கு நினைவில்லை என்று கூறினார்.

2000ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், கிரெஷ்டன் வேலே அட்வான்ஸ் பத்திரிக்கையின் பெண் நிருபரிடம், ஜஸ்டின் ட்ரூடோ தகாத முறையில் நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்நாட்டு அரசியல் விமர்சகர் வாரன் கின்செல்லா, 18 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளார்.  நிகழ்ச்சிக்கு மறுநாள் அந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியானதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது கனடா முழுவதும் பரபரப்பு செய்தியாகி உள்ளது. கனடாவில் இரும்பு மற்றும் அலுமினியம் துறை பணியாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கலந்துகொண்டார். 

அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 18 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை பாலியல் ரீதியாக ட்ரூடோ சீண்டியது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் அலுவக செய்தி தொடர்பாளர் ஒருவர், "பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அனைவரையும் மரியாதையாக நடத்தும் வழக்கமுடையவர். அவர் பங்கெடுத்த நிகழ்ச்சி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை"என்று கூறியுள்ளார். 

கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்றதை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் பெண் உறுப்பினர்களுக்கு தொல்லை கொடுத்த 2 உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து நீக்கினார். 

கடந்த 2017ம் ஆண்டில் பணி இடங்களில் பெண்கள் தினசரி சந்திக்கும் பிரச்னைகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் புதிய சட்டங்களை அமல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP