கனடா: பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி; தீவிரவாத தாக்குதலா?

இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து டொரோண்டோ போலீசார் இன்னும் தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
 | 

கனடா: பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி; தீவிரவாத தாக்குதலா?

கனடா: பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி; தீவிரவாத தாக்குதலா?

கனடாவின் டொரோன்டோ நகரில், நேற்று ஒரு இளைஞர், வேனை வேகமாக ஒட்டிச் சென்று, சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதினான். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 

நேற்று டொரோண்டோ நகரின் முக்கிய பகுதியில், சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்களை நோக்கி வேகமாக வந்து ஒரு வேன் மோதியது. பிளாட்பாரத்தில் ஏறி, நிற்காமல் சென்ற வேன், பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவை மீது மோதியது. வயதானவர்கள், இளைஞர்கள் என பலர் இந்த தாக்குதலிலும் சிக்கினர். சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வேனை ஓட்டிய 25 வயதான அலெக் மினாசியன், அதிலிருந்து இறங்கி வந்து வெளியே நிற்க, துப்பாக்கியுடன் ஒரு காவல்துறை அதிகாரி அவனை கைது செய்ய முயற்சித்தார். ஆனால், துப்பாக்கி போல தனது செல்போனை நீட்டிய அலெக், அந்த போலீஸ் அதிகாரியை பார்த்து, "சூடு..தலையில் சுட்டு என்னை கொன்றுவிடு" என்றார். ஆனால்,  அந்த அதிகாரி, நிதானமாக அவனை அணுகி, கைது செய்தார். இதை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து டொரோண்டோ போலீசார் இன்னும் தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. 

முன்னதாக, ஐரோப்பிய நாடுகளில் இதுபோல, வாகனங்களை ஆயுதமாக பயன்படுத்தி ஐ.எஸ் அமைப்பை பின்பற்றும் சிலர் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP