முன்னாள் காதலர்களுக்கு ஆந்த்ராக்ஸ் மிரட்டல்: பிடிபட்டார் கனடா நாட்டுப் பெண்

கனடா நாட்டில் தனது 17 முன்னாள் காதலர்கள் பணியாற்றும் இடங்களுக்கு ஆந்த்ராக்ஸ் வைரஸ் மிரட்டல் விடுத்த பெண்ணிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

முன்னாள் காதலர்களுக்கு ஆந்த்ராக்ஸ் மிரட்டல்: பிடிபட்டார் கனடா நாட்டுப் பெண்

கனடா நாட்டில் தனது 17 முன்னாள் காதலர்கள் பணியாற்றும் இடங்களுக்கு ஆந்த்ராக்ஸ் வைரஸ் மிரட்டல் விடுத்த பெண்ணிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கனடாவில் சமீப காலமாக அதிக இடங்களில் ஆந்த்ராக்ஸ் வைரஸ் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது போல மொத்தம் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 6 மாத இடைவெளியில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள், ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 

அனைத்து மிரட்டல்களும் ஒரே மாதிரி இருந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்த அலெக்சா எமர்சன் (33) என்ற பெண்ணே காரணம் என தெரியவந்தது. துணை நடிகையான அவர், தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக இந்த மிரட்டல்  நாடகத்தை நடத்தியுள்ளார். 

தனது 17 முன்னாள் காதலர்கள் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, வெண்ணிற பவுடர்களை அனுப்பி அவை ஆந்த்ராக்ஸ் கிருமிகள் எனவும் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். அவரால் ஏற்பட்ட அவசர அழைப்புகளால் போலீசார், மருத்துவ குழுக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். 

இதையடுத்து போலி செய்திகளை பரப்பி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறைத் தண்டனை முடிந்தபின் அவர் மனநலக் காப்பகத்தில் சோதனைக்கு உள்ளாக வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP