தொல்லை செய்த குழந்தையை ஹெராயின் கொடுத்து கொன்ற அமெரிக்கத் தாய்!!

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்மணி தனது ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார்.
 | 

தொல்லை செய்த குழந்தையை ஹெராயின் கொடுத்து கொன்ற அமெரிக்கத் தாய்!!

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்மணி தூங்காமல் தொல்லை கொடுத்த அவருடைய ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார். 

அமெரிக்கா மெயின் என்ற பகுதியைச் சேர்ந்த மெலிகன் என்ற பெண்மணிக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. தூங்காமல் தொல்லை கொடுத்த அவருடைய ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார். அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதி போலீசார் மெலிகனை கைது செய்துள்ளனர்.

தொல்லை கொடுத்த குழந்தையை தூங்க வைப்பதற்காக ஹெராயின் போதைப் பொருளை வழங்கியதாக மெலிகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் 2,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் ஜாமீன் கோரி அவர் தொடர்ந்த மனுவில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரது கணவர் மற்றும் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் அவர் விலகி இருக்கும்படி நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. போதைப் பொருள் கொடுத்து தாயே குழந்தையை கொலை செய்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP