சவுதி அரேபியாவில் கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பெண்களை பணியமர்த்த நடவடிக்கை

சவுதி அரேபியாவில் கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பெண்களை பணியமர்த்த நடவடிக்கை
 | 

சவுதி அரேபியாவில் கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பெண்களை பணியமர்த்த நடவடிக்கை


சவுதி அரேபிய பெண்களுக்கு கார் ஓட்ட அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, கால் டாக்ஸி நிறுவனங்கள் 10 ஆயிரம் பெண்களை, டாக்ஸி  ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

சவுதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் இசுலாமியச் சட்ட முறைமையில் இருந்தும், அரேபிய பண்பாட்டில் இருந்தும் வரையறை செய்யப்படுகின்றன. ஆண் ஆதிக்க வரலாற்றைக் கொண்ட சவுதி அரேபியாவில், ஆண் பெண் பிரிவினை, பெண்களின் கொளரவம் ஆகியவை முக்கியமானவை. உலகளவில்  பெண்களுக்கு மிகக் குறைந்தளவிலான சுதந்திரங்களும், உரிமைகளும் உள்ள நாடுகளில் சவுதி அரேபியா ஒன்று.


இதனை தொடர்ந்து அந்நாட்டு பெண்கள் இத்தகைய  ஒடுக்குமுறைக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். ட்விட்டர்  மூலமும் இணையம் வாயிலாகவும் அவர்கள் தமது உரிமைகளுக்காக போராடிவருகிறார்கள். இந்நிலையில் சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் லாரி, பைக் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு டிசம்பரில் அறிவித்தது. அதன் அடிப்படையில், ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


இதைத் தொடர்ந்து, அங்குள்ள கால் டாக்ஸி நிறுவனங்கள், பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.  உபெர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்ஸி நிறுவனங்கள் இந்த முயற்சியை துவங்கியுள்ளனர். இதற்காக 10,௦௦௦ பெண்களை பணியில் அமர்த்துவார்கள் என தெரிகிறது. மேலும் சவுதியை பொறுத்தவரையில், 80 % பெண்களே அதிகம் டாக்ஸியை பயன்படுத்துவார்கள் என்பதால் இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP