கொரோனா மருந்துக்கு ஒரு கோடியா..

இந்த கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு தனி நபராக இருந்தாலும் அவர்கள் குழுவாக இணைந்து கண்டறிந்தாலும் அவர்களுக்கு ஒரு மில்லியன் யுவான்( இந்திய மதிப்பில் ஒரு கோடி) வரை பரிசளிப்பதாக ஜாக்கிசான் கூறியுள்ளார்.
 | 

கொரோனா மருந்துக்கு ஒரு கோடியா..

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 53 நாடுகளில் இருப்பவர்களையும் தொற்றுக்குள்ளாக்கியிருக்கிறது. இதுவரை சீனாவில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ் தொற்றுதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

உலக சுகாதார நிறுவனம் முதல் உலகில் இருக்கும் அத்தனை மருந்தியல் நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸ்க்கு மரூந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இன்றுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் ஓய்வில்லாமல் உழைத்துவருகிறார்கள். இந்நிலையில்  சீனாவில் முகமூடி உபகரணங்களை பல நாடுகளும் அனுப்பிவரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும்  மாஸ்க் நன்கொடை அளித்தார். 

                                                           கொரோனா மருந்துக்கு ஒரு கோடியா..

தற்போது கொரோனா வைரஸால் பரபரப்பாக இருக்க வேண்டிய நகரங்களும் வீதிகளும் வெறிச்சோடி கிடப்பதாக  வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். 
இந்த கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு தனி நபராக இருந்தாலும் அவர்கள் குழுவாக இணைந்து கண்டறிந்தாலும் அவர்களுக்கு ஒரு மில்லியன் யுவான்( இந்திய மதிப்பில் ஒரு கோடி) வரை பரிசளிப்பதாக கூறியுள்ளார். மேலும் வைரஸை கண்டறிய அறிவியலும் தொழில்நுட்பமுமும் தான் கைகொடுக்கும். இது போன்றே உலக மக்கள் அனைவரும் எண்ணுகிறார்கள் என்று  தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP