கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி71 பேர் பலி! 1000 பேர் மாயம்!!

List of Misஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 1000 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 | 

கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி71 பேர் பலி! 1000 பேர் மாயம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71  ஆக அதிகரித்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 1000 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத் தலைநகர் சாக்ரமென்டோ நகருக்கு வடக்கே கடந்த 8 ஆம் தேதி பற்றிய காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கடந்த 8ம்தேதி முதல் பரவிவரும் இந்த காட்டுத்தீயினால், இதுவரை அங்கு சுமார் 1 லட்சம் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. வடக்கில் உள்ள பாரடைஸ் எனும் நகரம் இந்த காட்டுத் தீயால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் மூன்று இடங்களில் தீ வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீயின் விளைவாக வடக்குப் பகுதியில் 570 சதுர கிலோ மீட்டர் பாதிப்படைந்துள்ளதாகவும், 12 ஆயிரம் வீடுகள் அழிந்து விட்டதாகவும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தீ பாதிக்கப்பட்ட இடங்களில் மேலும் 10 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாரடைஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 100 பேர் மாயமானதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தற்போது 1000 ஆக அதிகரித்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP