ஈரான் போராட்டங்களில் 22 பேர் பலி; வெளிநாடுகள் மீது பழிபோடும் அரசு

ஈரான் போராட்டங்களில் 22 பேர் பலி; வெளிநாடுகள் மீது பழிபோடும் அரசு
 | 

ஈரான் போராட்டங்களில் 22 பேர் பலி; வெளிநாடுகள் மீது பழிபோடும் அரசு


ஈரான்  நாட்டின் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு பாதுகாப்பு படையினரை வைத்து நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுவரை போராட்டக்காரர்கள் 22 பேர் பலியாகியுள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு அதிபர் அயடோல்லா அலி கமேனி, ஈரானின் எதிரிகள் தான் இந்த போராட்டங்களுக்கு காரணம் என தெரிவித்தார். போராட்டங்கள் அதிகமானதை தொடர்ந்து, அந்நாட்டில் ஏற்கனவே கடும் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. 

இதையடுத்து இன்று பேசிய கமேனி, "எதிரிகள் ஒன்று சேர்ந்து நம்மை பிரிக்கப் பார்க்கிறார்கள். பணம், ஆயுதம், செல்வாக்கு என தங்களது அத்தனை சக்தியையும் பயன்படுத்தி இஸ்லாமிய அரசை எதிரிகள் கலைக்கப் பார்க்கிறார்கள்" என தொலைக்காட்சியில் கமேனி உரையாற்றினார். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசினார்.

மற்ற நகரங்களில் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது. அதனால் அங்கு பெரிய போராட்டங்கள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப் படவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP