Logo

நீண்ட ஆயுள் தரும்  எளிமையான மூச்சு பயிற்சி…!

ஒரே மாதத்தில் ஆச்சரியத்தக்க வகையில் பல்வேறு அவசரவேலைகளிலும் மூச்சை ஆழ்ந்து இழுத்து விடுவதில் கவனம் செலுத்துவீர்கள்...!
 | 

நீண்ட ஆயுள் தரும்  எளிமையான மூச்சு பயிற்சி…!

100 வயதை தாண்டியும் ஆரோக்யமாக வாழ்ந்த மூதாதையர்களின் தலைமுறையில் வந்தவர்கள் நாம். ஆனால் அவர்களது ஆயுளில் பாதியைக் கூட நிச்சயமாக இன்றைய தலைமுறையினர் கழிக்கிறார்கள் என்பது நிரந்தரமில்லாத உண்மை. வேகமான உலகில் வேகமாக வாழ்ந்து வேகமாக மடியவே விரும்பு கிறது  இன்றைய   நமது வாழ்க்கை முறையும்..

முன்னோர்கள் வாழ்ந்த காலங்கள் ஆரோக்யத்தின் பொற்காலம்.. மருத்துவர்கள் இல்லாமலேயே இன்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விஷயங்களை யும் பின்பற்றி வாழ்ந்தார்கள். ஆழமாக இழுத்து மூச்சு விடுவது,  உணவை உமிழ் நீரோடு நன்றாக மென்று சாப்பிடுவது,  பானைத் தண்ணீரை அருந்துவது, வேலை யையே உடற்பயிற்சியாக செய்தது  என்று ஒவ்வொன்றையும் நினைத்து பார்த் தால் பிரமிப்பாக இருக்கிறது.

உடல் ஆரோக்யத்தை மேன்மைபடுத்துவதில் முக்கியபங்கு வகிப்பது மூச்சு பயிற்சி.  மனிதனின் ஆயுள் காலம் அவன் விடும் மூச்சு தான் தீர்மானிக்கிறது. வேகமாக மூச்சை இழுத்து விரைவாக வெளிவிடப்படும் மூச்சு தன்மையால்  ஆரோக்ய சீர்கேடுதான் உண்டாகும். ஆழ்ந்து மூச்சுவிட்டால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீரடையும் என்பதை முன்னோர்கள் அன்றே கண்டறிந்திருக்கிறார்கள். 

”மூச்சு விடவே நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கோம்...அவ்ளோ வேலை என்ற டயலாக்” நம்மிடமிருந்து  வருவது கூட சகஜமானதுதான். ஆனால் நாம் முறை யாக சுவாசிக்கிறோமோ என்பதை உணரும் நேரம் கூட இல்லாமல் ஓடிக் கொண்டேயிருப்பதன் விளைவுதான் இன்று நம்மை ஆக்கிரமித்திருக்கும் நோய் கள். எவ்வித சிகிச்சையும் இல்லாமலேயே இருக்கும் நோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும், நோய்கள் வராமல் பாதுகாத்துகொள்ளவும்   மூச்சு பயிற்சியை முறையாக செய்தால் போதும்.

பொதுவாக  மனிதன்  இயல்பு நிலையில் 15 முறை மூச்சு விடுகிறான். ஆனால் பதட்டம், கோபம்  நிறைந்திருக்கும் நேரங்களில் இதன் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.   எத்தகைய சூழலிலும்  மூச்சு விடும் அளவு ஒரே சீராக இருக் கும் போது  நிமிடத்துக்கு 10 முறை என்னும் எண்ணிக்கையில் வந்து நிற்கும். 

தினமும் அதிகாலையிலும் மாலையிலும்  தொடர்ந்து 10 நிமிடங்கள்  மூச்சு பயிற்சி செய்தால் போதும்.  மூச்சு பயிற்சி என்பது யோகாசனம், தியானத்தோடு தொடர்பு உடையது.. அதற்கு குருவோடு இணைந்த பயிற்சியால் தான் உரிய பலன் கிடைக்கும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. ஆழ்ந்து சுவாசிக்க யாரு டைய ஆலோசனையும் பயிற்சியும் தேவையில்லை. 

காலை நேரங்களில் காற்று தூய்மையாக இருக்கும்.அதிகாலையில் ஒரு தம்ளர் நீர் அருந்தி காற்றோட்டமுள்ள இடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும்.  கீழே விரிப்பை விரித்து முதுகுத்தண்டு வளையாமல் நிமிர்ந்து  உட்கார வேண்டும். இடது நாசியை விரல்களால் மூடி வலது நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து   இப்போது வலது நாசியை விரல்களால் மூடி இடது நாசி வழியாக மூச்சை வெளியே விடவேண்டும்

இந்தப் பயிற்சிக்கூட சிரமம்தான் என்பவர்கள் மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து..  நுரையீரல் வரை நிரப்பி...  சில நொடிகள் நிறுத்தி மீண்டும்  வெளியே  பொறுமையாக விடவேண்டும். இது எளிய பயிற்சியே. குழந்தைகள் முதல்  வயதானவர்கள் வரை எல்லோராலும் செய்யக் கூடியதே... . இப்படி செய்தால் மன அழுத்தம், பரபரப்பு அனைத்தும்  குறைந்து விவேகத்துடன் செயல்பட தொடங்குவீர்கள். 

செய்துபாருங்களேன் ஒரே மாதத்தில் ஆச்சரியத்தக்க வகையில் பல்வேறு அவசரவேலைகளிலும் மூச்சை ஆழ்ந்து இழுத்து விடுவதில் கவனம் செலுத்துவீர்கள்...!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP