1. Home
  2. ஆரோக்கியம்

அழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...

அழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...

அழகாவும் இருக்கணும் ஆரோக்யமாவும் இருக்கணும் என்ன செய்யணும் அப்படின்னு கேட்கிறவங்களுக்கு மருத்துவர்களது பெஸ்ட் சாய்ஸ் ஆயில் புல்லிங் தான். வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகுதோ இல்லையோ வாய் நிறைய நல்லெண்ணெயை ஊத்தி நல்லா கொப்பளிச்சா இருக்கிற எல்லா நோயும் பறந்து போயிடும்னு நம்ம முன்னோர்கள் சொல்கிறார்கள்.

இதெல்லாம் 1000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் கடைப்பிடிக்கவும் செய்தார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது.சமீப வருடங்களாக ஆயில் புல்லிங் செய்வது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துவருகிறது. ஆயில் புல்லிங் என்றால் என்ன என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது என்றும் பார்ப்போம்

ஆயில் புல்லிங்:
அதிகாலையில் பல் துலக்குவது போன்று அதிகாலையிலேயே பல் துலக்கியதும் (வெறும் வயிற்றிலும் செய்யலாம்) சுத்தமான நல்லெண் ணெயை வாயில் (நன்றாக கொப்புளிக்கும் அளவுக்கு) ஊற்றி பற்களின் இடைவெளி முழுவதும் படுமாறும் ஊடுருவிச் செல்லும் வகையிலும் நன்றாக கொப்புளிக்க வேண்டும்.

சிலர் ஐந்து நிமிடங்களில் அதை உமிழ்ந்துவிடுவார்கள். இதனால் பலன் முழுமையாக கிடைக்காது. தொடர்ந்து 15 லிருந்து 25 நிமிடங்கள் வரை பற்களின் அனைத்து இடைவெளிகளிலும் என்ணெய்படுமாறு கொப்புளித்து பிறகு உமிழ வேண்டும். இந்த நேரத்தில் எண்ணெயானது நுரைத்து வெண்மை போல் நீர்த்து இருக்கும். இதுதான் சரியான ஆயில் புல்லிங் என்றழைக்கப்படுகிறது.

ஆயில் புல்லிங் நன்மைகள்:
வாய்ப்புண், தொண்டைப்புண், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு போன்றவற்றுக்கு உப்பு நீரில் வாய்கொப்பளிக்க சொல்வார்கள். ஆனால் ஆயில் புல்லிங் செய்தால் பற்களில் உள்ள நச்சுப்பொருள்கள் வெளியேறுவதோடு வாய் துர்நாற்றம் பிரச்னைகளும் நீங்கிவிடும். பற்களில் உள்ள அதிக மஞ்சள் நிற கறையை நீக்கி வெண்மையை உண்டாக்கும்.அதிக இனிப்புகளால் உண்டாகும் சொத்தை பிரச்னையையும் தவிடு பொடி யாக்கும்.

ஒரு பயிற்சி பல நோய்கள் நிவாரணம் என்பதற்கேற்ப ஆயில்புல்லிங் பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பல்,வாய் சம்பந்தமான கோளாறுகள், கண் காது பிரச்னைகள், வயிறு உபாதைகள், மலச்சிக்கல், ஒற்றைத்தலைவலி, உடல் சோர்வு, மூட்டு பிரச்னை, ஆஸ்துமா, சிறுநீரக பிரச்னைகள், உறக்கமின்மை போன்ற அனைத்து பிரச்னைகளையும் நீக்கும் சிறந்த நிவாரணியாக ஆயில் புல்லிங் செயல்படுகிறது.

ஆயில் புல்லிங் செய்யும் போது கன்னக்குழிகளுக்கு சிறந்த பயிற்சியாகி சருமத்தைப் பொலிவுற செய்கிறது. வறண்ட சருமத்தைப் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. சுருங்க சொன்னால் ஆரோக்ய குறைபாடான வாழ்க்கை முறையை ஆரோக்ய மிகுதியான வாழ்க்கையாக மாற்றுகிறது.

எவ்வளவு நாட்கள் செய்யலாம்?
இரவு படுக்கையில் புரண்டாமல் ஆழ்ந்த உறக்கம்வரும் வரை அதிகாலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் செய்யலாம். உடலில் இருக்கும் நச்சுக் களை முழுமையாக வெளியேற்ற தொடர்ந்து ஒரு வருடம் வரை செய்வது நல்லது. குறைந்தது 6 மாதங்களாவது ஆயில் புல்லிங் செய்தால் அழ கும் ஆரோக்யமும் மெருகேறுவதைக் கண்கூடாக காணலாம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like