ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ஸா? இதை ட்ரை பண்ணுங்களேன்...

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் மன அழுத்தத்தின் காரணமாக வருகின்றன. இறுக்கமான ஒரு சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலையிலும், அனைவரும் ஒருவித மன அழுத்தத்துடனே உழன்று கொண்டிருக்கிறார்கள்.
 | 

ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ஸா? இதை ட்ரை பண்ணுங்களேன்...

  

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் மன அழுத்தத்தின் காரணமாக வருகின்றன. இறுக்கமான ஒரு சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலையிலும், அனைவரும் ஒருவித மன அழுத்தத்துடனே உழன்று கொண்டிருக்கிறார்கள். இத்தகைய மன அழுத்தத்தை போக்க சில எளிய வழிகள்... 

* வேலைகளை தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டிய வேலைகளை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

 

* செய்ய முடியாத வேலைகள், அல்லது நேரம் போதாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகள் இருந்தால், 'மன்னிக்கவும்', 'தற்போது என்னால் இயலாது' என்று சொல்ல பழகுங்கள்.

 

* திட்டமிட்டு வேலைகளை முடியுங்கள். கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதை தவிருங்கள். 

 

* பிறருக்காக எதையேனும் செய்ய பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

 

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களை தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

 

* ஒரே நாளில் அனைத்து வேலைகளையும் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

 

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள் . அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை லேசாக்கும்.

 

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுகள், அடுத்தவர்களை காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

 

* காபி, டீ அதிகம் குடிப்பதை தவிருங்கள். புகை, மது வேண்டாம்.(கூடுமானவரை குறைக்க பாருங்கள்). 

 

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள். மூச்சுப்பயிற்சி உங்களுக்கு மன அமைதி கொடுக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP