மனித உடலில் புதிய உறுப்பு! பிரமிக்க வைக்கும் உடலில் தொழில்நுட்பம்

மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

மனித உடலில் புதிய உறுப்பு! பிரமிக்க வைக்கும் உடலில் தொழில்நுட்பம்


மனித உடலில், சருமத்துக்குக் கீழ் புதிய உறுப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடலில் புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 'இண்டெர்ஸ்டிடியம்' (Interstitium) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உறுப்பு, உடலின் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, நம்முடைய சருமத்துக்கு அடியில், இதய ரத்தக் குழாய்களில், நுரையீரலில், தசையில், செரிமான மண்டலத்தில் என எல்லா இடத்திலும் இது படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.

உடலின் மிகப்பெரிய உறுப்பாக சருமம் கருதப்படுகிறது. ஆனால், அதையும் மிஞ்சிவிட்டது இந்த உறுப்பு. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினினால் உருவானது. அதாவது மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இது நம்முடைய சருமத்தில் ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. இதை ஆய்வு செய்வதன் மூலம் எப்படி புற்றுநோய் உடல் முழுக்க பரவுகிறது என்ற உண்மையைக் கண்டறிய முடியும். இதன்மூலம் புற்றுநோய் சிகிச்சையில் இன்னும் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP