வாய்க்கு பூட்டு; உணவு பற்றிய செய்திகளை வழங்கும் சென்சார்

வாயில் பகுதியில் பொறுத்தி உணவுப் பழக்கத்தைக் கண்காணிக்கும் மிகச் சிறிய சென்சாரை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 | 

வாய்க்கு பூட்டு; உணவு பற்றிய செய்திகளை வழங்கும் சென்சார்


வாயில் பகுதியில் பொறுத்தி உணவுப் பழக்கத்தைக் கண்காணிக்கும் மிகச் சிறிய சென்சாரை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மிக நுண்ணிய சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சென்சார், உணவில் உள்ள குளுக்கோஸ், உப்பு மற்றும் ஆல்கஹால் அளவை கணக்கிட்டுவிடும். இதை வாய் பகுதியில் பல்லில் ஒட்டிவைத்தால் உட்கொள்ளப்படும் உணவுகளைப் பற்றிய தகவல்களை அது அளிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


மூன்று அடுக்குகள் கொண்ட இந்த சென்சாரில் மேல் அடுக்கு பயோரெஸ்பான்சிவ் (bioresponsive) அடுக்கு. இதுவே உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள், வேதிப் பொருட்கள் போன்றவற்றை அறிந்து தகவல்களை வழங்குகிறது. மற்ற இரண்டு அடுக்குகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து ஆண்டனா (Antenna) போன்று செயல்படுகிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் அலைகள் மூலம் தரவுகள் பெறப்படுகின்றன. இந்த அடுக்குகளில் படும் உணவின் தன்மைக்கு ஏற்ப அவை நிறம் மாறுகின்றன. முதன்முறையாக் உணவு உட்கொள்ளும் வழக்கத்தைக் கண்காணிப்பதற்கு இந்த ஸ்மார்ட் சென்சார் உருவாக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP