Logo

ஸ்மார்ட் மோதிரம் பற்றி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தில் மேம்படுத்த, இதயத்துடிப்பை அறியும் ஸ்மார்ட் மோதிரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 | 

ஸ்மார்ட் மோதிரம் பற்றி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தில் மேம்படுத்த, இதயத்துடிப்பை அறியும் ஸ்மார்ட் மோதிரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உடலின் மீது அக்கறை கொள்ள உதவும் உருவாக்கப்பட்ட ஹெல்த் பேண்ட்களை பற்றி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது ஸ்மார்ட் மோதிரமாக ‘மோட்டிவ் ரிங்’ உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மோதிரத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம். கைவிரலில் அணிந்ததும், டைட்டானியம் மற்றும் பிளாஸ்ட்க் பொருட்களால் ஆன இந்த மோதிரம் செயல்படத் தொடங்குகிறது. மோதிரம் செயல்பட தொடங்கியது என்பதை அதில் எறியும் பச்சை விளக்கின் மூலம் அறியலாம்.

மோதிரம் அணிந்திருப்பவர் என்ன செய்துகொண்டிருக்கிறார், என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து செயல்படுகிறது. செயலி மூலம் இயங்கும் மோட்டிவ் மோதிரத்தின் உட்புறம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டிவ் ரிங் அணிந்தவரின் உடல் எடை, எவ்வளவு தூரம் பயணம் செய்தார், இதய துடிப்பு போன்ற தவல்களை உடனுக்குடன் தருகிறது. தூங்கும் நேரம், உணவு உட்கொள்ளும் நேரம், அலுவலக கூட்டம் எப்போது என்பதை மோட்டிவ் ரிங்கில் முன்கூட்டியே பதிவிட்டால் நம்மை குறித்த நேரத்தில் எழுப்பி தயார் படுத்துகிறது.

மோட்டிவ் ரிங், நாம் அதிக வேலை செய்யும்போது, அதிகம் உழைக்கிறீர்கள் ஓய்வெடுங்கள், என அட்வைஸ் சொல்கிறது. அதுவே சும்மாவே இருந்தால் நீண்ட நேரம் சும்மாவே இருக்கிறீர்கள் என நக்கல் அடித்து விடுகிறது. சரியான நேரத்தில் தூங்கி, உடல் எடையை சீராக வைத்துள்ளோம் என்றால் அதற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறது இந்த ஸ்மார்ட் ரிங். இதனை அணிந்தபடியே அனைத்து வேலைகளையும் நாம் செய்யலாம். தண்ணீரில் நனைந்தாலும் எதுவும் ஆகாது.

நம்முடன் ஓர் அங்கமாக நம்கூடவே வாழும் மோட்டிவ் ரிங்கை 80 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தாலே போதும். இத்தனை சிறப்புகள் இருந்தாலும் இதில் இருக்கும் ஒரே குறை ஆப்பிள் மொபைலில் மட்டுமே மோட்டிவ் ரிங் இயங்கும். மோட்டிவ் ரிங்-ன் விலை இந்திய மதிப்பில் 12,500 ரூபாயாகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP