இத்தனை பேரை காவுவாங்கிய இதய நோய்! பகீர் ஆய்வு

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.
 | 

இத்தனை பேரை காவுவாங்கிய இதய நோய்! பகீர் ஆய்வு

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.

கடந்த 1994 ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை கார்டியோ வாஸ்குலார் நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 41% குறைந்துள்ளதாகவும், அதே சமயத்தில் இந்தியாவில் 34% அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 15- 20 சதவிகிதத்திலும், அமெரிக்காவில் 6-9 சதவிகிதத்திலும் உள்ளது

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 115 முதல் 209 பேர் இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டு மரணமடைவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு லட்சம் மக்கள் தொகையில் 5681 பேருக்கு இதய நோயாளிகளாக வாழ்கின்றனர். இவ்வளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் இதய நோயிக்கு, சுகாதாரமில்லாத உணவு பழக்கவழக்கங்கள் புகையிலை, அதிகளவிலான கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்றவையே காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 2016ம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சகம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 62.5 மறும் 12.7 மில்லியன் மக்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளனர். இதில் இதய நோயினால் இறப்பவர்கள் 30 முதல் 69 வயதுவரை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய நோய் என்பது வெறும் ஹார்ட் அட்டாக் மட்டுமல்லாது பிற வகை நோய்களும் அடங்கும். 

இந்தியாவில் இதய நோயினால் அதிகளவில் இறந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களாகும். இதய நோய் பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP