90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல்

90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர். மேலும் பெண்களுக்கு சுயவெறுப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 | 

90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல்

90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல்

90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர். மேலும் பெண்களுக்கு சுயவெறுப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி தாங்கள் அழகாக இருக்க வேண்டும், தங்களை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக, அழகுபடுத்திக்கொள்வர். குறிப்பாக பெண்களுக்கு மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களோ இல்லையோ நாம் நம்மை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதனால்தான், பெண்கள் மத்தியில் செல்ஃபி மோகம் அதிகம் உள்ளது என்கின்றனர். நம்மை நாமே ரசித்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட லேட்டஸ்ட் ட்ரெண்ட் செல்ஃபி தான்.

ஆனால், என்னதான் இருந்தாலும் பெண்களுக்கு தங்கள் உடல் அமைப்பு பற்றி திருப்தி இல்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிலும், 100 க்கும் 90 இந்திய பெண்கள் தங்களை நேசிப்பதற்கு பதில் தனக்கு தானே வெறுப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல்

பிரேக்கிங் தி சைலன்ஸ் அபவுட் இந்தியன் உமன் (CHUP: Breaking the Silence About India's Women) என்ற புத்தகத்தை மையமாக வைத்து 600-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்கள் உடல் அமைப்பு பற்றி என்ன நினைக்கின்றனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கருத்து கூறிய 90 சதவிகித பெண்கள், தங்கள் உடல் அமைப்பில் சுயவெறுப்பையே காட்டுவது அம்பலமாகியுள்ளது.

சில பெண்களுக்கு உருவத்தில் அதிக வளர்ச்சி இருக்கும், சிலருக்கு வளர்ச்சி குறைவாகவே இருக்கும். தங்களது அழகையும், வளார்ச்சியையும் மற்ற பெண்களோடு ஒப்பிட்டு தங்களை குறைத்து மதிப்பிட்டு தங்களாகவே வெறுப்பதாக தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தங்களது தோற்றத்தையும், உயரத்தையும், அழகையும், நிறத்தையும் மற்றவர்களோடு ஒப்பிட்டு போட்டிபோட முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், அந்த இடத்திலே சுயவெறுப்பு ஆரம்பிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP