இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும்! ஆய்வில் தகவல்

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6.92 கோடியாகும்.
 | 

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும்! ஆய்வில் தகவல்

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

நாளுக்கு நாள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். 

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6.92 கோடியாகும். இந்நிலையில், 'Lancet Diabetes & Endocrinology' என்ற மருத்துவப் பத்திரிக்கையில், ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வயதேறுவது, நகரமயமாக்கல், உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம், உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் அடுத்த 12 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டில் டைப்2 வகை நீரிழிவினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 40.6 கோடி என்றும், இது, 2030ஆம் ஆண்டில் 51.1 கோடியாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் மட்டும் இருப்பார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP