1. Home
  2. ஆரோக்கியம்

வயிறு வலியை அலட்சியப்படுத்தினால் ஆபத்துதான்..

வயிறு வலியை அலட்சியப்படுத்தினால் ஆபத்துதான்..

பிறந்தது முதல் வளர்ந்த காலங்களிலும் இறுதிக்காலத்தை எட்டும் போதும் இந்த வலி அவஸ்தையை அனுபவிக்காமல் எந்த மனிதர் களும் இருக்க மாட்டார்கள். அதுஎன்னவென்று தான் உங்களுக்கும் தெரியுமே.. படுத்தி எடுக்கும் வயிறு வலி தான்.முன்பெல்லாம் முன்னோர்கள் குழந்தைகள் அழுதால் ஒமம் கலந்தநீரை கொடுப்பார்கள். வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் வயிறு வலி வந்தால் முதலில் தருவது ஓமம் கலந்த நீர்தான்.

உடலில் பொதுவாக எந்த வலி வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் வயிறு வலி மட்டும் தாங்கவே முடியாது என்று சொல்வார்கள்.உண்மையில் எந்த வலியும் தாங்கவே முடியாத ஒன்றுதான். மற்ற வலிகள் எதனால் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும். பெரும்பாலான வலிகள் இதனால்தான் என்பது உறுதிப்படும். கண் பார்வை குறைபாடு, மூட்டுவலி, கை வலி, கழுத்துவலி, காதுவலி எல்லாமே அந்தந்த உறுப்புகளோடு தொடர்புகொண்டிருக்கும். ஆனால் வயிறு வலிக்கான கார ணம் இன்னதென்று குறிப்பிட்டு கூற முடியாது.

எந்த வலி வந்தாலும் முதலில் கைவைத்தியம் செய்து பார்ப்போம். ஆனால் வயிறுவலியின் ஆரம்பத்தில் கை வைத்தியம் செய்தாலும் தொடர்ந்து வலிஇருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. பொதுவாக எப்போதேனும் உடல் உஷ்ணத்தால் வலி வந்தால் அச்சம் கொள்ளவேண்டியதில்லை.

வயிறு வலி வர காரணங்கள் என்று ஒன்றை மட்டும் குறிப்பிடமுடியாது. அது இயல்பான வலியாக இருந்தால் அடி வயிறு வலி, வயிறு உப்புசம், அடிக்கடி ஏப்பம், இரத்தத்தோடு மலம் வெளியேறுதல், மலச்சிக்கல் போன்றவை காரணமாக இருக்கலாம். தொடர்ந்து வயிறு வலி இருந்தால் அது குடல் புண், உணவு செரிமானமின்மை, புளிப்பு காரமிக்க உணவுகள், கெட்டுப்போன உணவுகள், கல்லீரல்,இரைப்பை,பித்தப்பை, வயிற்று புற்றுநோய், கணைய கோளாறுகள், தண்டுவடக் கோளா றுகள், நிணநீர்சுரப்பி குடல் சம்பந்தமான பிரச்னைகளாகவும் இருக்கலாம். பொதுவாக இடதுபக்கமாக மட்டுமே தொடர்ந்து வலி இருந்தால் சிறுநீர் பாதையில் தொற்று இருக்கலாம்.

வயிறு வலி தொடர்ந்து வரும்போது எந்தபக்கமாக வலி தொடங்குகிறது. இடப்பக்கமாகவா, வலப்பக்கமாகவா? சிறிது சிறி தாக வலி முழுவதும் பரவுகிறதா? இடைவெளி இன்றி வயிறு வலிக்கிறதா? சிறிது சிறிதாக மேல் வயிறு வரை வலி பரவு கிறதா? வயிறு முழுவதும் தொடங்கும் வலி முதுகுவரை செல்கிறதா? நிற்கவும் குனியவும் இயலாமல் போகிறதா? வலி வரும்போது வயிற்றில் வீக்கம் தென்படுகிறதா? இதையெல்லாம் கண்டிப்பாக கவனித்து வையுங்கள்.தாமதிக்காமல் மருத் துவரிடம் சென்று வலியின் மொத்த பாதிப்பையும் சொல்லும் போது தகுந்த பரிசோதனை மூலம் உரிய காரணத்தைக் கண்டறிய முடியும்.

இதைப் படிக்கும் பெண்கள் வயிறு வலி வரும்போது அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மாதவிடாயின் போது வரும் வயிற்று வலி வேறு. அதே நேரம் வயிறுவலி இருப்பவர்கள் எல்லோருமே மேற்கண்ட நோய் இருக்குமோ என்று அச்சம் கொள்ள தேவையில்லை. ஆரம்பத்திலேயே என்ன காரணம் என்று தெரிந்தால் உரிய சிகிச்சை மூலம் வருமுன் காத்திட லாம்.

இனி வயிறுவலிதானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள்.கவனிக்க தவறினால் சமயங்களில்ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க் கும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like