அசத்தல் 10 வீட்டுக் குறிப்புகள் 

என்ன தான் சர்க்கரை டப்பாவை இறுக மூடி வைத்தாலும், எறும்பு தொல்லையை சமாளிக்க முடியவில்லையா? டப்பாவில் நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது.
 | 

அசத்தல் 10 வீட்டுக் குறிப்புகள் 

* வீட்டில் கரண்ட் கட், வாங்கி வைத்த பாலை காய்ச்ச நேரமில்லை, பிரிட்ஜில் வைக்கவும் முடியாது. கவலையே வேண்டாம். ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் பால் பாக்கெட்டை போட்டு வைத்து விட்டால் போதும். நான்கு மணி நேரம் கழித்துக்கூட காய்ச்சி கொள்ளலாம்.

* கடைக்காரரிடம் கொசுரு கேட்டு வாங்கி வைக்கும் கறிவேப்பில்லை, அடிக்கடி காய்ந்து கடுபேத்துகிறதா? நோ டென்ஷன் ஒரு அலுமினிய பாத்திரத்தில் இலையை போட்டு மூடி வைத்துவிட்டால் இந்த தொல்லையே இருக்காது.

* என்ன தான் சர்க்கரை டப்பாவை இறுக மூடி வைத்தாலும், எறும்பு தொல்லையை சமாளிக்க முடியவில்லையா? டப்பாவில் நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது.

* பீங்கான் கப்பில் காபி மற்றும் டீ கறை படிந்து அசிங்கமாக இருந்தால், வெங்காயத்தை வெட்டி இந்த கறையில் தேய்த்தால் புது பொலிவுடன் பீங்கான் இருக்கும்.

* வெங்காயத்தை தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.

* என்ன தான் கழுவினாலும், பிளாஸ்கில் ஒரு மாதிரியான வாடை வருகிறதா? வினிகர் போட்டு கழுவினால் இந்த வாசனையை துரத்தலாம்.

* மீன் சமைத்த பின்பும், கையில் அந்த வாசம் இருந்து கொண்டே இருக்கிறதா? கவலையே வேண்டாம் மீனை கையில் எடுப்பதற்கு முன்பாக சில சொட்டு சமையல் எண்ணையை உள்ளங்கையில் தேய்த்து கொள்ளுங்கள். இந்த தொல்லை இருக்காது.

* வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கிவிடும்.

* சமையலுக்கு பயன்படுத்திய பிறகு கத்தியில் தேங்காய் எண்ணையை தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

* வெங்காய தோசை செய்யும் போது, தோசையின் நடுவில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்துவிடுவதுடன், சுவையாகவும் இருக்கும்.     

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP