குளிர்காலம் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பொருட்கள்!

தற்போது கால நிலை மாறி குளிர்காலம் தொடங்கி விட்டது. இருமல், தும்மல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைளை தவிர்க்க, இஞ்சி, பூண்டு, கீரைகள், சிட்ரெஸ் பழங்களை மறக்காமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
 | 

குளிர்காலம் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பொருட்கள்!

காலநிலை மாறுகிறது. ஸ்வெட்டர் தேவைப்படும் குளிர்காலம் வந்துவிட்டது. இனி சூடான சூப்பும், ஹாட் சாக்லெட்டும் பலரின் அபிமான உணவுகளாக மாறிவிடும். டெங்கு, ஃப்ளூ போன்ற பல வகையான காய்ச்சல்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாம் சாப்பிடும் உணவில் சிலவற்றை மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். 

இஞ்சி - குளிர்காலத்தில் டீ, சூப் என அனைத்திலும் அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பொருள். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கும். 

பூண்டு - வாசனையுடன் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் அல்லிசின் என்ற மூலக்கூறும் அதிகம் உள்ளது. 

சிட்ரஸ் - வைட்டமின் சி அதிகமிருக்கும் எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி போன்றவை. 

கீரைகள் - பசலை, பரட்டை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவற்றில் குறைந்த கலோரியும், அதிக ஆன்டி ஆக்ஸிடென்டும், பீட்டா கரோட்டினும் விட்டமின் சி-யும் நிறைந்துள்ளன. இவைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை. 

காளான் - செலினியம், நியாசின், ரைபோஃப்ளேவின் ஆகிய மூலக்கூறுகளை கொண்டிருக்கும் காளான் குளிர்காலத்திற்கு உகந்தது. 

மஞ்சள் - இந்த முக்கியமான சமையல் பொருளை நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் முடிந்தளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP