கோடைக்காலங்களில் ஏன் இளநீர் பருக‌ வேண்டும்?

நீர் பற்றாக்குறையால் சிறுநீர் சம்மந்தப்பட்ட பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இளநீரை பருகுவதனால், சிருநீரகத்தில் உள்ள கற்கள் கரைக்கப்படுவதுடன், சீறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீரக வீக்கம் போன்ற பிரச்னைகளும் விரைவிலேயே நீங்கிவிடும்.
 | 

கோடைக்காலங்களில் ஏன் இளநீர் பருக‌ வேண்டும்?

வந்துவிட்டது வெயில் காலம்,  இந்த பருவகாலம், வெப்பத்தை அதிகரிப்பதுடன் வெய்யில் கால நோய்களையும் கூடவே சேர்த்து கொண்டு வந்து விடுகிறது. இந்த நேரங்களில்,சந்திக்க நேரிடும் பலதரப்பட்ட உஷ்ண பிரச்னைகளுக்கான, நல்ல தீர்வை கொடுக்க கூடிய, அரு மருந்து என்றால் அது இளநீர் தான்.  இது, செவ்விளநீர், பச்சை இளநீர் என இருவகையில் கிடைக்கின்றன.  'வேரில் நீர்விட தலையில் சுமந்து நன்றி சொல்லும் தென்னை; என்பர், இத்தகைய தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர் வெய்யில் கால நோய்கள் பலவற்றுக்கு தீர்வை கொடுக்கிறது.  

இளநீரில், உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போ ஹைட்ரேட், எரிசக்தி, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சில இளநீரில் 5.5 சதவிகிதம் சர்க்கரை இருப்பதால் அதில் உள்ள நீர் இனிப்பாகவும், சில இளநீரில் பொட்டாசியம், தாது உப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதினால், உவ‌ர்ப்பு சுவையுடனும் இருக்கின்றன.  இனி இளநீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப்பற்றி பார்க்கலாம்.... 

கோடைக்காலங்களில் ஏன் இளநீர் பருக‌ வேண்டும்?

வெயில் காலம் ஆரம்பித்தவுடன் நாம் சந்திக்கும் முதல் பிரச்னை வேர்குரு, இந்த வேர்குருவை போக்க சிறந்த வழி இளநீர் பருகுவதுதான்.

இளநீரில் உள்ள எதிர்ப்பு சக்தி, சின்னம்மை, பெரியம்மை போன்ற வெப்ப மண்டல வைரஸ்களால் ஏற்படும் நோய்களை விரைவில் குணமடைய செய்கிறது.

நீர் பற்றாக்குறையால் சிறுநீர் சம்மந்தப்பட்ட பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.  இளநீரை பருகுவதனால், சிருநீரகத்தில் உள்ள கற்கள் கரைக்கப்படுவதுடன், சீறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீரக‌ வீக்கம் போன்ற பிரச்னைகளும் விரைவிலேயே நீங்கிவிடும். மேலும் சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் இளநீர் செயல்படுகிறது.

கோடை காலங்களில் நாம் உட்கொள்ளும் பல உணவுகள், சரியாக செரிமானம் ஆகாமல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி  ஏற்படுத்திவிடும், இளநீரை தொடர்ந்து பருகிவருவதினால், ஜீரண சக்தி அதிகரிப்பதுடன், சிறந்த‌ மலமிளக்கியாகவும் இளநீர் செயல்படுகிறது. 

கோடைக்காலங்களில் ஏன் இளநீர் பருக‌ வேண்டும்?

நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் மதுபானங்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கு நல்ல தீர்வாக  இளநீர் இருக்கும்.

இதில் உள்ள தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை, ரத்த அழுத்த உயர்வை கட்டுப்படுத்துவதுடன், ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்குகிறது.  மேலும் ரத்த உற்பத்தியை அதிகப்படுத்தி, இரத்த சோகையை போக்குகிறது.

இளநீர்,உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதுடன், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இளநீரில் உள்ள பொட்டாசியம், உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுக்களை அதிகரித்து வயிற்றுப்போக்கு, காலரா போன்ற பிரச்னையை விரைவில் சரிசெய்கிறது.

உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் அதிக உடல் சூடு, கண் எரிச்சல் குணமாக, இளநீரை தினமும் பருகி வந்தாலே போதும்.

கோடைக்காலங்களில் ஏன் இளநீர் பருக‌ வேண்டும்?

இளநீரில் உள்ள கரிமப்பொருள், உடல் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன், சரியான வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கிறது.

வெயில் காலங்களில் வியர்வை அதிகமாக வெளியேறுவதனால்,விரைவிலேயே உடல் சோர்ந்து விடும், இந்த சமயங்களில் இளநீர் அருந்துவதால் நல்ல புத்துணர்வுடன் செயல் பட முடியும்.

உடலுக்கு பல நோய்களை கொண்டு வரும், அதிக விலையுள்ள வண்ண குளிர் பானங்களை பருகுவதைக்காட்டிலும், நமக்கு அருகாமையிலேயே  கிடைக்க கூடிய இளநீரை வாங்கி அருந்துவதால், வெய்யில் கால நோய்களிலிருந்து, நமது உடல் பாதுகாக்கப்படுவதுடன், நமது நாட்டின் விவசாயமும் பாதுகாக்கப்படும். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP