யோகாசனங்கள் ஏன்  செய்ய வேண்டும்?

உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து உடலையும் உள்ள தையும் உற்சாகமாக வைக்க எளிய பயிற்சிகளையாவது மேற்கொள் ளுங்கள். வலி நிவாரணிக்கு மாத்திரை தேவையில்லை. எளிய ஆசனங்கள் போதும்..
 | 

யோகாசனங்கள் ஏன்  செய்ய வேண்டும்?

பசி வரும் வரையா காத்திருக்கிறோம். வருவதற்கு முன்பே நேரத்துக்கு சாப்பிடுவதில்லையா அதுபோலதான் இன்றைய உலகில் நோய் வரும் வரை காத்திருந்து பிறகு மருத்துவரிடம் போக நேராமல் உடலை பராமரிக்க வேண்டும்.  உடல் உழைப்பின் மூலம் இவற்றையெல்லாம் கடைப்பிடித்து வந்த நம் முன் னோர்கள்  போல் அல்லாமல் வியர்வின்றியும் உழைத்து பொருளீட்ட முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறோம். ஆனால் உடல் ஆரோக்யத்தை இழந்து விட்டோம். 

இப்போதாவது சுதாரித்துக் கொண்டால்தான் வரும் சந்ததியினராவது ஆரோக்ய குறைபாடின்றி வாழ்வார்கள். உணவு மாற்றம் ஒருபுறம் இருக்கட்டும். உடல் கட்டுக்கோப்பையும், உள்ளுறுப் பையு வலுப்படுத்தும் யோகாசனங்கள் செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வு தற்போது அதிகரித்துவருகிறது.

தற்போது கணினி மயமாக்கப்பட்ட உலகில்  கணினி பயன்பாட்டுக்கு பிறகு  நோய்கள் விரைவாகவே ஆதிக்கம் செலுத்துகிறது. நோய் தீர்க்க போடும் மாத் திரைகள் நோயை மட்டுமே நீக்கும். ஆனால் ஆசனங்கள் நோயோடு மனதையும் ஆரோக்யமாக புத்துணர்வாக வைத்திருக்கும் என்று நிரூபித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.

உடல் உள் உறுப்புகளையும் வெளி உறுப்புகளையும் பலம் பெற செய்து தெளிந்த மனநிலையை கொடுக்கும் இந்தக்கலை 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வில்  உருவானது. இந்த யோகக்கலைதான்  யோகாசனம் என்று அழைக்கப் படுகிறது. யோகம் என்றால் சமஸ்கிருதச் சொல் ஆகும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி நேர்வழிப்படுத்தும் செயல் என்று சொல்கிறார்கள். ஆசனம் என்பது இருக்கை ஆகும்.  உட்கார்ந்து பேசினாலே பெரிய பிரச்னைகளையும் தீர்வு காண முடியும் என்பதால் உடலை ஒரு குறிப்பிட்ட திசையில் அமரசெய்து மன அமைதி யைப் பெறமுடியும் என்பதும் நிரூபனமாகிறது.

உடலுக்கும் மனதுக்கும் நேரடி தொடர்பு உண்டு. உடலில் ஏற்படும்  வலி  உள்ளத் தையும் பாதிக்கும். உடம்பை யோகப்பயிற்சிகளால்  வளர்த்து உயிரையும் வளர்த் தேன் என்கிறார் திருமூலர். யோகத்தில் 64 வகைகள் உண்டு. இவைகளில் முக்கியமானது நாம் கடைப்பிடிக்கும் தியானம், ஆசனம், பிராணயாமம், பஜனை, மந்திரம் ஜெபித்தல் போன்றவையாகும். இவையெல்லாம் யோகம் செய்பவர் களுக்கே உரியது என்று நினைக்க வேண்டாம்.

அவசரம், ஓட்டம்,  பரபரப்பு, மன உளைச்சல், மனப்போரட்டம் என்னும் வேக மான உலகில் மூச்சை கூட யோசித்து விடுகிறோம்.  இந்த மூச்சை நிதானித்து விடுவதில் தொடங்குகிறது யோகாசனம். இன்றைய  வேகமான சூழ்நிலையில் மனதை  அலைபாயவிடாமல் காப்பது  மிகுந்த சிரமம் என்பதாலேயே யோகாச னமும் அவசியமாகிறது. உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து உடலையும் உள்ள தையும் உற்சாகமாக வைக்க எளிய பயிற்சிகளையாவது மேற்கொள் ளுங்கள். வலி நிவாரணிக்கு மாத்திரை  தேவையில்லை. எளிய ஆசனங்கள் போதும்.. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP