பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் பூப்படையும் காலத்திலிருந்தே கருப்பையை வலுவாக்கும் உணவுகளைக் கொடுத்து வருவார்கள்... பூப்படைந்த முதல் ஒன்பது நாட்களும் அதிகாலையில் எழுப்பி வெறும் வயிற்றில் நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக உடைத்து வாயில் ஊற்றுவார்கள். கூடவே சுத்தமான நல்லெண்ணெயை ஒரு தேக்கரண்டியும் குடிக்க வைப்பார்கள்.
 | 

பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய்க் காலங்களில் பெண்களின் பாடு சொல்லி மாளாது… 30 வருடங்களுக்கு முன்பு அந்த மூன்று  நாட்களும் ஓய்வு கொடுத்து ஒரே இடத்தில் அமரவைப்பார்கள். தீட்டு என்று ஒதுக்கினாலும் பெண்கள் அந்த நாள்களில் பலவீனமாக இருப்பார்கள்.. இரத்தப் போக்கு இருக்கும் நேரங்களில் மேற்கொண்டு உடலை அலட்டிக்கொண்டால் அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு  உடலை மேலும் பலவீனமாக்கும் என்பதை  உணர்ந்திருந்தார்கள்.

பெண்கள் பூப்படையும் காலத்திலிருந்தே கருப்பையை வலுவாக்கும் உணவுகளைக் கொடுத்து வருவார்கள்... பூப்படைந்த முதல் ஒன்பது நாட்களும் அதிகாலையில் எழுப்பி வெறும் வயிற்றில் நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக உடைத்து வாயில் ஊற்றுவார்கள். கூடவே சுத்தமான நல்லெண்ணெயை ஒரு தேக்கரண்டியும் குடிக்க வைப்பார்கள். வெறுமனே எண்ணெய் குடிக்க கஷ்டப்படும் பெண்களுக்கு வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் முக்கி கொடுப்பார்கள். 

அதிகாலை எண்ணெய் உணவோடு தொடங்கும் உபசரிப்பில் மூன்று வேளையும் உளுந்துவடை இல்லாமல் உணவு தரமாட்டார்கள்.. இப்போது போல் ஸ்வீட்ஸ் எதுவும் கிடையாது.  எல்லாமே வீட்டிலேயே தயார் செய்யப்படும் உணவுகள் தான். கார அரிசிமாவை புட்டாக்கி, கொப்பரைத் தேங்காயைத் துருவி, நாட்டுச்சர்க்கரை, ஏலத்தூள், நெய் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு அன்றாடம்  டிபனுக்கு கண்டிப்பாக இருக்கும்.

உளுந்துவடையில் செய்யப்படும் அத்திகா பணியாரம், வெல்லப்பணியாரம், உளுந்துவடை, உளுந்தங்களி இப்படி எல்லாமே தோல் நீக்கப்படாத உளுந்தம்பருப்பிலும், நல்லெண்ணெயிலும் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். வற்புறுத்தி இவை அனைத்தையும் சாப்பிட செய்வார்கள். பூப்படைந்த காலத்திலிருந்து தொடர்ந்து ஒரு வருடம் வரை இந்த பலகாரங்கள் அந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக  இருக்கும்.

இவை அனைத்தும் கருப்பையை வலுப்படுத்தும். கருமுட்டை உருவாவதை சீராக்கும். மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியை உண்டாக்காது. அதிக இரத்தப்போக்கை உண்டாக்கினாலும் சோர்வை உண்டாக்காமல் சத்துக்களைக் கொடுக்கும். 

 இடுப்பு எலும்பை வலுப்படுத்துவதால் பெண்கள் பேறுகாலத்தில் பிரசவ நேரத்தில் சுகப்பிரசவம் அடைய இடுப்பு எலும்புகள் விரிவடைகின்றன. பெண்கள் சுகப்பிரசவம் அடையவும், திருமணத்துக்குப் பிறகு கருச்சிதைவு, கரு வுறுதல் பிரச்னை போன்றவற்றில் பாதிக்காமல்  இருக்கவும் பூப்படையும் காலத்திலிருந்தே  தயார்படுத்தபட்டார்கள்… ஆனால் தற்போது பூப்படையும் பெண்களுக்கு பாரம்பரிய உணவுகள் திகட்ட திகட்ட கொடுப்பதில்லை… கருப்பை பிரச்னைகளையும், மாதவிடாய் கோளாறுகளையும் கொண்டிருக்கும்  பெண்கள்  பாதிப்படைய மாறி வரும் இந்த பாரம்பரிய உணவும் ஒரு காரணம்..

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP