இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?

நாகரிக உலகத்தில் வெளியில் விளையாடுவது என்பது வெறும் கற்பனை கதையாக மாறிவிட்டது. இதனால் இயற்கையாக சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கிடைப்பதில்லை. இந்த வைட்டமின் டி குறைபாடு இரு பாலினத்தவரின் குழந்தை பெரும் தன்மையை குறைத்து விடும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன
 | 

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?

திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் இரு மனம் சேர்ந்து இல்லறம் காணும் தம்பதியர், இன்பத்தை சமமாக பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், குழந்தையின்மை என்னும் துன்பத்திற்கு மட்டும் பெரும்பாலும் பெண்களை தான் முழுமையாக குற்றம்சாட்டி விடுகின்றனர். உண்மையில் ஒரு குழந்தையின் பிறப்பில், தாய், தந்தை இருவருக்கும் சம பங்கு இருப்பதை போல, குழந்தையின்மைக்கும் இருவரும் பொறுப்பேற்க வேண்டும். சரியான வயதில் திருமணம் செய்தும், சில இளம்தம்பதிகளுக்கு குழந்தை பேறு மிக தாமதமாவே கிடைக்கிறது . இந்த சூழலை மாற்றி எவ்வாறு இயற்கையான முறையில் கருவுற முடியும் என்பதை பார்க்கலாம்.

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?

நாகரிக உலகத்தில் வெளியில் விளையாடுவது என்பது வெறும் கற்பனை கதையாக மாறிவிட்டது. இதனால் இயற்கையாக சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கிடைப்பதில்லை.  இந்த வைட்டமின் டி குறைபாடு இரு பாலினத்தவரின் குழந்தை பெரும் தன்மையை குறைத்து விடும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. 

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?

வேலை அல்லது பொழுது போக்கிற்காக மடிக்கணினியை தொடர்ந்து மடி மீது வைத்து பயன்படுத்துவதால் விந்தணு உற்பத்தி குறைந்து விடும். அதாவது அதிக வெப்பம் ஏற்படுவதால் விந்தணுக்களின் உற்பத்தி குறைந்து விடுமாம்.

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?
முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மை 25% க்கு மேல் குறைவதாக  ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?
அதிக புகை பிடித்தல் மற்றும் மது பழக்கம் ஆண், பெண் என இருபாலருக்கும் மலட்டு தன்மையை அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு இவை கருப்பையில் கரு தங்குவதற்கான சூழலை மாற்றி விடுவதாக  சொல்லப்படுகிறது.

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?

உடல்  பருமன் அதிகரிப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, உடலில் அதிக கொழுப்பை சேர்க்க கூடிய துரித உணவுகளை தவிர்த்து, சத்துள்ள பழங்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்? 

காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொண்டால் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் அதிகமாக உண்டாகும். எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ள கூடாது. 

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?

மன அழுத்தம் குழந்தை பெறுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.  மன அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க ஆண், பெண் இருபாலரும்  தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கும் எந்த பிரச்னையும், சுமுகமான கலந்துரையாடல் மூலம் சரி செய்துவிட முடியும்.

இயற்கையான முறையில் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வர வேண்டும். ஏனென்றால் மாதவிடாய் சுழற்சிக்கும் கருவுறுதலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே மாதவிடாய் சுழற்சியை கவனித்து வருவது மிக முக்கியமாகும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP