அச்சுறுத்தும் மூலநோய் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

உள் மூலம், வெளிமூலம் இரண்டுமே இருக்குன்னு சொல்ற ஆதி மூலம் மாதிரி நிறைய் பேர் இன்னிக்கு அவஸ்தைப்படறது மூல நோயால் தான்.நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை கவனிக்கப்படாமல் தீவிரமாகும் போது மூலநோயில் கொண்டு வந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 | 

அச்சுறுத்தும் மூலநோய் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

உள் மூலம், வெளிமூலம் இரண்டுமே இருக்குன்னு சொல்ற ஆதி மூலம் மாதிரி நிறைய் பேர் இன்னிக்கு அவஸ்தைப்படறது மூல நோயால் தான். நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை கவனிக்கப்படாமல் தீவிரமாகும் போது மூலநோயில் கொண்டு வந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  3 மாத குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை அவ்வப்போது சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது மலச்சிக்கல். 

ஆசன வாயில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதால் மூலநோய் உண்டாகிறது. ஆசனவாயின் துவாரத்தில் சதை வளர்ந்து மலம் கழிக்கும் போது அழுத்தம் காரணமாக இரத்தம் கசிவது முதலாவது. அடுத்தது ஆசனவாய் வெடித்து வறண்டு இருப்பது, மூன்றாவது  ஆசனவாயில் அருகே வலி தரக்கூடிய கட்டி  உருவாவதோடு அதில் இருந்து சீழ் வெளியேறுவது.  இதுவே பெளத்திரம் என்று அழைக்கப்படுகிறது. நான்காவது ஆசனவாயில் அரிப்பு, இரத்தப்போக்கு, வலி, அடைப்பு போன்ற  பாதிப்புகளை உண்டாக்குவது. இதைக் கவனிக்காவிட்டால் புற்று நோயை உண்டாக்கிவிடும்..

மூலநோய் அறிகுறி:
மலம் கழிக்கும் போது இரத்தம் வருவது, ஆசனவாயில் கடுமையான வலி, எரிச்சல், ஆசனவாயைச் சுற்றி அரிப்பு போன்றவை பொதுவான அறி குறிகள். ஆனால் இவையெல்லாம் இருந்தாலே மூலம்தான் என்ற முடிவுக்கும் வரக் கூடாது. அவை அதிக உடல் உஷ்ணமாக இருக்கலாம். அல் லது மூலநோயின் தொடக்கமாக இருக்கலாம்.

அச்சுறுத்தும் மூலநோய் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? 

சிலருக்கு ஆசனவாய் இடத்தைத் தொட்டு பார்த்தால் வீக்கம் இருக்கும், சிலருக்கு இரத்தத்துடன் சளியும் கலந்து வெளியேறும். அந்த இடம் உட்கார முடியாமல் வலியை அதிகரிக்கும். அதனால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

மூலநோய் யாருக்கு வரலாம்:
மாறிவரும் உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைந்த உணவுகள், போதிய நீர்ச்சததின்மை, அதிப்படியான உடல் உஷ்ணம், பொறித்த உணவுகள், மது அருந்துபவர்கள், அசைவ உணவுகளை அதிகம் எடுத்துகொள்பவர்கள், துரித உணவு வகைகள், மன அழுத்தம், இவையெல்லாம் அதிகமாகும் போது மலச்சிக்கல் பிரச்னை எட்டிப்பார்க்க துவங்கிவிடுகிறது. கோடைக்காலத்தில் இதன் பாதிப்புகள் அதிகமாகவே தாக்க தொடங்குகிறது. 
மலச்சிக்கல், உடலில் போதிய நீர்ச்சத்தின்மை,அதிகப்படியான உடல் சூடு, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்கள், நின்றுக் கொண்டே பணி செய்பவர்கள், அன்றாடம் மலம் கழிக்காமல் தள்ளிப்போடுபவர்கள் போன்றவர்களுக்கு மூலநோயின் தாக்கம் நிச்சயமாக இருக் கும் என்றே சொல்லலாம்.

மூலநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
அன்றாடம் காலை எழுந்ததும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு எவ்வித தூண்டலுமின்றி இயல்பாகவே நடக்க வேண்டும். அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரை அருந்தாமல் மிதமான வெந்நீரை எடுத்துக்கொண்டால் மலம் கழிக்கும் பழக்கம் இயல்பாகவே நடக்கும்.  தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், தானியங்கள் அதிகம் சேர்த்துகொள்ள வேண்டும். இது மலத்தை இல குவாக்கி மலச்சிக்கல் உருவாவதைத் தடுக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணம் இருப்பவர்கள் வெள்ளை வெங்காயத்தை அதிகம் சேர்த்துவந்தால் உஷ்ணத்தைக் குறைத்து மூலம் வராமல் காக்கும். மூலத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மூலத்தைக் கட்டுப்படுத்தும். குளிர்ச்சி தரும் வெந்தயம், சீரகம் போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்வதும் நல்லது.

மூலம் வந்த பிறகு அவதிப்படுவதை விட வருவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பது தான் மூலச்சூடு அவதிக்குள்ளானவர் களின் அறிவுரை. 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP