கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன?

முதல் மூன்று மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் கரு சிதைவு நடைபெறலாம். இவ்வாறு கரு சிதைவு ஏற்பட என்ன காரணம் என்பதை பார்க்கலாம். பெண்ணின் கருப்பை சரியான முறையில் வளர்ச்சியடையாமல் இருந்தாலும், அதனுள் தங்கும் கரு களைவதற்கான சாத்திய கூறுகள் அதிகம்.
 | 

கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன?

பொதுவாக கர்ப்ப காலம் மும்மூன்று மாதங்கள் அடங்கிய மூன்று பருவங்களாக பகுக்கப்படுகிறது. இந்த பகுப்பின்படி  கர்ப்ப காலம் 40 வாரங்களாகும்.  இதில் முதல் மூன்று மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் கருச்சிதைவு நடைபெறலாம். இவ்வாறு ஏற்பட என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

பெண்ணின் கருப்பை சரியான முறையில் வளர்ச்சியடையாமல் இருந்தாலும், அதனுள் தங்கும் கரு களைவதற்கான சாத்திய கூறுகள் அதிகம்.

 கருப்பையில் கரு சரியாக பதியமாகாத பட்சத்திலும் கரு சிதைவு ஏற்படக்கூடும்.  

கர்ப்பப் பையில் உருவான கரு சரியாக வளர்ச்சி பெறாமல் இருந்தாலும் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். 

கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன?

பெண்ணின் கருப்பை சரியான முறையில் வளர்ச்சியடையாமல் இருந்தாலும், அதனுள் தங்கும் கரு களைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

கருவுற்ற பெண்ணிற்கு  மது, புகை போன்ற தீய பழக்கங்கள் இருந்தால் அதனாலும் கரு சிதைவு ஏற்படும். 

கருவுற்ற சமயங்களில் ஏற்படும் அதிக மனஅழுத்தம் காரணமாக கரு சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

 கருப்பையின் வாய் திறந்திருத்தாலும் கருச்சிதைவிற்கான வாய்ப்புகள் அதிகம்.

 சில பெண்களுக்கு  இரட்டைக் கருப்பை உருவாகியிருக்கும். அவ்வாறு இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்படும்.

கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவதாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது.

கருச்சிதைவிற்கான காரணங்கள் என்ன?

கருவுற்ற பெண்ணிற்கு ஏற்படும் நோய் தொற்றுகளால்  கருச்சிதைவு ஏற்படுகிறது. 

கருத்தரித்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளும் நீண்ட பயணம், ஏற்ற,இறக்கம் உள்ள இடங்களில் பயணிப்பது கரு சிதைவை ஏற்படுத்தும்.

அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவது, நீண்ட நேரம் கடினமான வேலைகளில் ஈடுபடுவதன் மூலமும் கருச்சிதைவு ஏற்படும்.

உடலில்  ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகள் உட்கொள்வதும் கரு சிதைவிற்கு காரணமாக அமைந்துவிடும்.

மாதவிடாய் நாட்களை சரியாக கணக்கில் வைத்துக் கொள்ளாததால், கருவுற்ற நாட்களை கண்டறிய இயலாது. இதனால்  கருவுற்ற நிலை தெரியாமல் போவதால் கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

newstm.in

  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP