நோய்களை நாம்தான் வரவழைத்துகொள்கிறோம்..

ஆடை மோகம் எதில் மீதாவது இருக்கட்டும் ஆனால் கோடைக்கு ஏற்றது கண்டிப்பாக பருத்தி ஆடைகள் தான் என்பதை மறவாதீர்கள்.. இயற்கை தந்த கொடை என்பதோடு நம்மை இயற்கையாகவும் வைத்திருப்பது பருத்தி ஆடைகள் மட்டும்தான்.
 | 

நோய்களை நாம்தான் வரவழைத்துகொள்கிறோம்..

நாகரிகத்தின் உச்சியில் நின்று கொண்டு ஆரோக்கியத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். மாறிப்போனது உணவு கலாசாரம் மட்டுமல்ல... ஆடை கலாசாரமும் தான்...  மாடர்ன் உணவுகள் மட்டுமா ஆரோக்கியத்தை சீர்குலைக்கின்றன. இயற்கைக்கு மாறான சூழலில் உடுத்தும் அதிகபட்ச ஃபேஷன் உடைகளும் கூட ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துகொண்டிருக்கின்றன. 

இயற்கையை வணங்கி இயற்கை அளித்த உணவுகளை சாப்பிட்டு இயற்கை தந்த பருத்தியை இழையாக்கி ஆடையாக்கிய காலத்தில் மிக நன்றாகவே வாழ்ந்தோம்.. நம் நாடு உஷ்ணம் மிகுந்த நாடு.. இயற்கையை தடுத்து நிறுத்தி வைக்க முடியாது என்பதால் இயற்கையோடு இணைந்தே நம் வாழ்க்கையும் இருந்தது. 

வெப்பம் மிகுந்த நம் நாட்டில் கோடைக்காலங்களில் பல மடங்கு வெப்பம் உடலைத் தாக்க தொடங்கும். இறுக்கமான பேண்ட், கனமான துணிகளைக் கொண்டு செய்யப்படும் ஆடைகள் எல்லாம் அழகுக்காகத்தான் தவிர ஆரோக்கியத்துக்கு அல்ல... வெப்பத்தை அதிகமாக கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய ஆடைகள் சருமத்துக்கு போதிய பாதுகாப்பைத் தருவதில்லை என்பதே  உண்மை. 

வெப்பமிகுதியால் வியர்வைகள் வெளியேறும் சூழ்நிலையில் மெல்லிய பருத்தியினாலான ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மையைக் கொண்டிருக்கும். வெப்பத்தின் தாக்கத்தால் உடனடியாக அதை வெளியேற்றும் தன்மையும் இதற்கு உண்டு. சூரியனின் அதிகப்படியான வெப்பம் உடலுக்குள் ஊடுருவதைத் தடுக்கும் அதே நேரம் உடலுக்கு தேவையான காற்றையும் அளிக்கிறது மெல்லிய பருத்தி ஆடைகள். கனமான துணிகளை கொண்ட உடைகள் வியர்வையை உறிஞ்சாமல் இருப்பதால் சரும அரிப்பு, சரும அலர்ஜி, வேனிற் கட்டிகள் இப்படி பல பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.

பருத்தி ஆடைகள் இலகுவான தன்மை கொண்டதால் உடலுக்கும் மனதுக்கும் ஒரு வித மகிழ்ச்சியையே உண்டு பண்ணுகிறது. உதாரணத்துக்கு ஒரு வயது குழந்தைக்கு அடுக்கடுக்காய் அலங்காரம் செய்யப்பட்ட சில்க் உடைகள் அழகுக்காக அணிவித்தாலும் குழந்தையின் சருமம் எரிச்சல் பட்டு  அதனால் குழந்தைகள் அழத்தொடங்கும்.. ஆனால் பருத்தி ஆடைகள் குழந்தைகளுக்கு இலகுவாக வேண்டிய காற்றை அளித்து மிருதுவான சருமத்தைப் பாதுகாக்கும் அதனால் தான் மருத்துவர்களும் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளையே பரிந்துரைக்கிறார்கள்.

ஆடை மோகம் எதில் மீதாவது இருக்கட்டும் ஆனால் கோடைக்கு ஏற்றது கண்டிப்பாக பருத்தி ஆடைகள் தான் என்பதை மறவாதீர்கள்.. இயற்கை தந்த கொடை என்பதோடு நம்மை இயற்கையாகவும் வைத்திருப்பது பருத்தி ஆடைகள் மட்டும்தான்.. 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP