இளநரையே இல்லாமல் போகணுமா? இதெல்லாம் செய்யுங்க...!

இன்று 100-க்கு 40% இளநரை பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். ஏன் இதைப் படிக்கும் உங்களுக்கும் கூட இந்தப் பிரச்னைகள் இருக்கலாம். ரசாயனம் கலந்த கெமிக்கல் டைகளை விட இயற்கை முறையைக் கடைப்பிடித்தால் ஆரம்பத்திலேயே இளநரையைத் தடுத்து விடலாம்.
 | 

இளநரையே இல்லாமல் போகணுமா? இதெல்லாம் செய்யுங்க...!

50 வயதுக்கு பிறகு கூந்தலின் ஓரங்களில் வெளிப்பட்ட  இளநரைகள் காதோரம் பார்க்கும் வெள்ளி மின்னல்கள் என்று கவிதையால் வர்ணிக்கப்பட்டது. இப்போது அதற்கெல்லாம் அவசியமே இல்லை. 5 வயது முதலே இருபாலருக்கும் இளநரை வருவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

இன்று 100-க்கு 40% இளநரை பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். ஏன் இதைப் படிக்கும் உங்களுக்கும் கூட இந்தப் பிரச்னைகள் இருக்கலாம். ரசாயனம் கலந்த கெமிக்கல் டைகளை விட இயற்கை முறையைக் கடைப்பிடித்தால் ஆரம்பத்திலேயே இளநரையைத் தடுத்து விடலாம்.  

உடலில் மெலனின் என்னும் நிறமிதான் கூந்தலுக்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கின்றது. பரம்பரையாகவும் இளநரை ஏற்படுவதுண்டு. ஆனால் மாறிவரும் உணவு முறைகள், கூந்தல் பராமரிப்பில் தொய்வு போன்ற காரணங்களால் கூட இளநரை அதிகரித்துவருகிறது.
மாசுபடிந்த காற்று நம் உடலுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் கேடு விளைவிக்கிறது.

வெளியில் சென்று வரும்போது கூந்தலின் வளர்ச்சியும் தூசு படிந்த கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. கூந்தல் அழுக்குகள் படிந்து பிசு பிசுப்புத் தன்மையுடன் வளர்ச்சியைத் தடுக்கிறது. கூந்தலை சரியாக பராமரிக்காமல் போகும்போது கூந்தலின் பொலிவு குறைந்து போதிய சத்தின்றி இளநரை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. 

முன்னோர்கள் எண்ணெய்க் குளியல் இளநரையைத் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவியது.  மேலும் கூந்தலை அலசுவதற்கு சீயக்காய், செம்பருத்தி இலை, வெந்தயம் மட்டுமே பயன்படுத்தினார்கள். தற்போது வாசனை மிக்க கெமிக்கல் கலந்த ஷாம்புகள்   பயன்படுத்துகிறோம். இது நிச்சயம் கூந்தலுக்கு கெடுதலையே உண்டாக்கும். இயன்றவரை ரசாயனம் கலக்காத ஷாம்புகளை மட்டுமே உபயோகிப்பது நல்லது. 

இளநரை தடுக்கும்... கூந்தல் உதிராது... கூந்தல் பளபளப்புக்கும்.. கூந்தல் வளரும் என்று வரும் விளம்பரங்கள் எல்லாமே விளம்பரங்களுக்காக மட்டும்தான்.... இளநரை இருப்பவர்கள் எளிய முறையில் இளநரை கூந்தலைத் தயாரிக்கலாம்.

தேவை:

சுத்தமான தேங்காயெண்ணெய் - முக்கால் லிட்டர். நல்லெண்ணெய் - கால் லிட்டர், கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்தி இலை, மருதாணி இலை  - தலா ஒரு கைப்பிடி.

செய்முறை:

மிக்ஸியில் கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, நெல்லிக்காயை சேர்த்து மைய அரைத்து இரும்பு வாணலியில் தேங்காயெண்ணையைக் காய்ச்சி கொதிக்கும் போது அரைத்த விழுதை ஊற்றி மேலும் ஒரு கொதிவிடவும். பிறகு  எண்ணெயை ஆறவைத்து அகன்ற பாத்திரத்தில் வெள்ளை துணி கட்டி வடிகட்டி தினமும் தலைக்கு தடவி வரவும்.  இதே எண்ணெயை இலேசாக சூடு செய்து  தலைக்கு ஆயில் மசாஜ் எடுக்கவும் செய்யலாம். கெமிக்கல் டை போல் உடனடியாக நரையைத் தடுக்காது. ஆனால் படிப்படியாக 100% இளநரை மறையும்.  கூந்தலின் வளர்ச்சியும், பளபளப்பும்  நிச்சயம் கூடும்.   
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP