தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

வைட்டமின் சி குறைபாட்டால், காரணமின்றி திடீரென உடல் எடை கூடும். குறிப்பாக அடிவயிற்றை சுற்றிலும் கொழுப்பு படிய ஆரம்பித்து தொப்பை விழ துவங்கும்.
 | 

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

வைட்டமின் சி உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களில் ஒன்று. சிட்ரிக் வகை பழங்களில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, இதயம் மற்றும் சரும பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி பல நோய்களிலிருந்து நமது உடலை காக்க கூடிய கவசமாக செயல்படும் வல்லமை கொண்டது. இந்த சத்து போதுமான அளவு உடலில் இல்லாத போது, பின் வரும் சில அறிகுறிகள் அல்லது உபாதைகளை சந்திக்க நேரிடும் . 

சருமக்கோளாறுகள் :

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

வைட்டமின் சியில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் சருமத்தை பாதுகாக்கும் வல்லமை கொண்டது. இந்த சத்து  குறையும் பட்சத்தில் சருமம் வறண்டு, அதிக கரும்புள்ளிகள், வெடிப்புகள், கரு வலையங்களோடு காணப்படும்.

காயங்கள் குணமாவதில் தாமதம்:

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

வைட்டமின் சி குறைப்பாட்டால் கொலாஜன் உற்பத்தி குறையும். இதன் காரணமாக உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக நீண்ட நாட்கள் ஆவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால்  கிருமித் தொற்று ஏற்பட்டு காயம் பெரிதாகும் வாய்ப்பும் உள்ளது.

பல் சார்ந்த பிரச்னைகள் :

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

பற்களின் உறுதி தன்மைக்கு மிக முக்கிய சத்தாக இருப்பது வைட்டமின் சி. இந்த சத்து போதுமான அளவு இல்லாத போது ஈறுகளில் வீக்கம், ரத்தம் கசிதல், பற்களின் உறுதி தன்மையை இழத்தல் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

இரும்புச் சத்து குறைபாடு மற்றும் அனீமியா :

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் இரும்புச் சத்துக்களை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி மிகவும் உதவிகரமாக இருக்கிறது. வைட்டமின் சி குறைபாட்டால் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவதுடன் அனீமியா பிரச்னை ஏற்படக்கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்:

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

வைட்டமின் சி யில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்  உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யக்கூடியது. வைட்டமின் சி குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாட்டால்  அடிக்கடி நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். அதோடு மிக ஆபத்தான நோய் பாதிப்பிற்கும் இது வழிவகுக்க கூடும்.

உடல் எடை கூடுதல்:

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

வைட்டமின் சி குறைபாட்டால், காரணமின்றி திடீரென உடல் எடை கூடும். குறிப்பாக அடிவயிற்றை சுற்றிலும் கொழுப்பு படிய ஆரம்பித்து தொப்பை விழ துவங்கும்.  உணவு கட்டுப்பாடு இருந்தும் சிலருக்கு தொப்பை விழ காரணம் வைட்டமின் சி குறைபாடு என சொல்லப்படுகிறது.

எப்போதும் சோர்வாக இருத்தல்:

தொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு!

வைட்டமின் சி பற்றாக்குறை உள்ளவர்கள் எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள் . அதோடு எரிச்சல் ஊட்டும் உணர்வுடனும், கோபமான உணர்வுடனும் இருப்பதற்கும் வைட்டமின் சி குறைபாடே காரணம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP