உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..!

புகையிலை உயிரை கொல்லும் என்றுதானே அனேக நேரங்களில் கேள்வி பட்டிருப்போம். உண்மையில் புகையிகை என்பது ஒரு மருந்துப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த 'நிகோடியானா டபாக்கம்' என்னும் தாவரமாகும். இது தக்காளி, சுண்டக்காய் போன்ற செடி வகையை சார்ந்ததாகும்.
 | 

உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..!

புகையிலை உயிரை கொல்லும் என்றுதானே அனேக நேரங்களில் கேள்வி பட்டிருப்போம். உண்மையில் புகையிகை என்பது ஒரு மருந்துப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த  'நிகோடியானா டபாக்கம்' என்னும் தாவரமாகும். இது தக்காளி, சுண்டக்காய் போன்ற செடி வகையை சார்ந்ததாகும். புகையிலை செடி முதன் முதலில் தென்னமெரிக்க பழங்குடியினரால் கிமு 500–3000 ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த இலைகளை கடவுளின் பரிசு என எண்ணிய பழங்குடியினர், இதன் காய்ந்த இலைகளை தீமூட்டு அதிலிருந்து வரும் புகைகளை கடவுளுக்கு அற்பணித்தனர். 

உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..!

புகையிலை வரலாற்றின் படி தென்னமெரிக்க மக்களால் கண்டறியப்பட்டு அமெரிக்காவிற்கும், ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கும், பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியதாக அறியப்படுகிறது. இந்த இலைகளை  ஐரோப்பியர்கள்,  மலேரியா, உணவுக் குழாய் அழற்சி, மூச்சிரைப்பு, போன்ற நோய்களுக்கும், விஷ முறிவு, வலி நிவாரிணியாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இந்த புகையிலை தோல் சம்மந்தமான அனைத்து வித நோய்களுக்கும் சிறந்த தீர்வாக கருதப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..!

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு இந்த புகையிலை பரப்பப்பட்டுள்ளது. வழிபாட்டின் போது மட்டும் பயன்படுத்தப்பட்ட  இந்த இலைகளின் புகைகள், காலப்போக்கில் தனிமனிதனின் போதையாக மாறியது. புகைப்பிடிப்பதால் தற்காலிக புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் இந்த புகையிலை தரப்போகும் நிறந்த பரிசு மிகப்பெரியது. புகையிலைகளை  செயற்கையான முறையில் பதனிடப்பட்டு, தூளாக்கி அதனுடன் 400 வகையான ரசயானங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் கலக்கப்பட்டு சிகரெட் தயாரிக்கப்படுகிறது.  

உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..!

இதனை புகைப்பதால் நுரையீரல் நோய், இதய கோளாறுகள், பக்கவாதம்,  புற்று நோய் போன்ற மிக கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆய்வின் படி வருடத்திற்கு எட்டு மில்லியன் மக்கள் இந்த புகையிலை பழக்கத்தாலும், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பதாலும் மரணத்தை சந்திக்கின்றனர் என்கிறது. இயற்கையின் கொடையான பச்சை புகையிலை தீர்க்க முடியாத எய்ட்ஸ் தொற்று போன்ற,பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை..!

சிறந்த மூலிகையை, போதையாக மாற்றி தற்கொலைக்கு மட்டுமல்ல கொலைக்கும் வழி வகுக்கின்றனர்.  உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று (மே 31) புகைப்பிடிக்கவும் மாட்டோம், புகையிலை பிடிப்பவரை அனுமதிக்கவும் மட்டோம் என்கிற உறுதி மொழியை ஏற்ப்போம். 

newstm.in

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP