ஆண்களின் விந்தணு  உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

ஒரு நெல்லியில் முப்பது ஆரஞ்சுப்பழத்தில் உள்ள உயிர்ச்சத்து´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது. மேலும் நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால், ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிப்பதுடன், பாலூணர்வும் தூண்டப்படுமாம்.
 | 

ஆண்களின் விந்தணு  உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

இன்றைய சமூகம் சந்திக்க கூடிய பெரும் பிரச்னை மலட்டுத்தன்மை, குழந்தையின்மை, இதற்கு சரியான தீர்வை தரக்கூடிய நெல்லிக்காயைப் பற்றித்தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம்...

மலை நெல்லிக்காய், புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு,நியாசின், உயிர்ச்சத்து ´பி1,` உயிர்ச்சத்து ´சி,` கரிச்சத்து,சுண்ணாம்பு,தாதுப்பொருட்கள், ஆகியவனற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.  மேலும் இதில் மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான உயிர்ச்சத்து 'சி' உள்ளது. குறிப்பாக, ஒரு நெல்லியில் முப்பது ஆரஞ்சுப்பழத்தில் உள்ள உயிர்ச்சத்து´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது.

இந்த நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதால்  கிடைக்க கூடிய நன்மைகள்:

ஆண்களின் விந்தணு  உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால், ஆண்களின் விந்தணு  உற்பத்தி அதிகரிப்பதுடன், பாலூணர்வும் தூண்டப்படுமாம்.

நெல்லியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தை இளமையுடன் வைத்திருக்க உதுவகிறது. மேலும்  சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து நீரிழிவு நோய் வருவதை தடுப்பதோடு, இன்சுலின் சரியான அளவு சுரப்பதற்கும் வழிவகை செய்கிறது.

மாரடைப்பிற்கு காரணமாக இருக்கும் இதயத் தமணிகளில் கொழுப்பு சேர்வைதை கட்டுப்படுத்தி, இதயத்தை பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது.

இதில் உள்ள கார்சினோஜெனிக் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று நோய் கிருமிகளுடன் போராடக்கூடியது.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட  நெல்லிக்கனி, வயிறு சம்மந்தமான அனைத்து உபாதைகளையும் சரிசெய்கிறது.

தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு நெல்லியுடன் சிறிது இஞ்சி, தேன் கலந்து ஜூஸாக அருந்த, விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும்.

நெல்லியில் உள்ள உயிர்ச்சத்துக்கள் முடிவளர்ச்சியை தூண்டி, இளநரை, முடி கொட்டுதல் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP