பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் சிறுதானிய கிச்சடி!

பூப்படையும் பருவத்தில் உள்ள பெண் பிள்ளைகள் முதல், மாதவிடாய் நின்ற பெண்கள் வரை அனைவருக்கும் உகந்தது. இடுப்பு வலி உள்ள ஆண்களும் இதை சாப்பிடலாம்.
 | 

பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் சிறுதானிய கிச்சடி!

இன்றைய காலத்தில், பெண்கள் மிகவும் பலவீனமாக காணப்படுகின்றனர். அந்த காலத்தை போல சத்தான ஆகாரங்கள் இல்லாதததும், போதிய உடல் உழைப்பு இல்லாததும் இதற்கு காரணம் என, மருத்துவர்கள் முதல், பிட்னஸ் ட்ரைனர்கள் வரை தெரிவிக்கின்றனர். 

வளர் இளம் பருவத்தினர், வயது வந்த இளம் பெண்கள், புதிதாக திருமணம் ஆனோர், பிள்ளைப்பேறு அடைந்த பெண்கள், 50 வயதை கடந்தோர் என அனைவருக்கும், இடுப்புக்கு பலம் சேர்க்கும் அற்புதமான சிறுதானிய உணவை இங்கு பாக்கலாம். 

தேவையான பொருட்கள்: சாமை, தோலுடனான கருப்பு உளுந்து, வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள். 

செய்முறை: ஒரு கப் தோல் உளுந்தை வெறும் வாணலில் வறுத்து, அதை ஆற வைத்து, பின் வறுத்த பருப்பை அப்படியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உளுந்தினால் ஏற்படும் வாயு தொல்லையை தவிர்க்கலாம். 

பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் சிறுதானிய கிச்சடி!

பின் ஊறிய பருப்புடன், ஒரு கப் சாமையை சேர்த்து, இதை 5 கப் தண்ணீர் சேர்த்து, அத்துடன் தேவையான அளவு வெங்காயம், பூண்டு பற்கள், மஞ்சள் தூள், தேவைக்கேற்ப பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்கு குழைவாக வெந்ததும், அதை இறக்கி, தேங்காய் துவையலுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

தேங்காய் துவையல் செய்முறை: ஒரு கை அளவு வெள்ளை உளுந்து, 4 - 5 மிளகாய் வற்றல், சிறிதளவு புளி, ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயம் இவை எல்லாவற்றையும், பொன்னிறத்தில் வறுக்கவும். அத்துடன் ஒரு மூடி தேங்காய் துருவல், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அவ்வளவுதான், தேங்காய் துவையல்தயார்.  

இது, நாகர்கோவில், திருநெல்வேலி பக்கம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையாகும். பொதுவாகவே,உளுந்து இடுப்புக்கு பலம் சேர்க்கும் உணவு என்பது அனைவருக்கு தெரிந்ததே. இத்துடன், சிறுதானிய வகையான, சாமை, பூண்டு ஆகியவை சேர்ப்பதால், கூடுதல் பலம் பெறலாம். 

பூப்படையும் பருவத்தில் உள்ள பெண் பிள்ளைகள் முதல், மாதவிடாய் நின்ற பெண்கள் வரை அனைவருக்கும் உகந்தது. இடுப்பு வலி உள்ள ஆண்களும் இதை சாப்பிடலாம். 

newstm.in
 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP