கர்ப்பத்தின் மூன்று பருவங்களும்... கர்ப்பிணி சந்திக்கும் மாற்றங்களும்!

கர்ப்ப காலம் என்பது மூன்று பருவங்களாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் மும்மூன்று மாதங்களாகவும், ஒவ்வொரு மும்மூன்று மாதத்திற்கும் 12 வாரங்களும் வரையறுக்கப்படுகிறது.
 | 

கர்ப்பத்தின் மூன்று பருவங்களும்... கர்ப்பிணி சந்திக்கும் மாற்றங்களும்!

கர்ப்ப காலம்  என்பது மூன்று பருவங்களாக  பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் மும்மூன்று மாதங்களாகவும், ஒவ்வொரு மும்மூன்று மாதத்திற்கும் 12 வாரங்களும் வரையறுக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் கர்ப்பம் தரித்த பெண் உடல் மற்றும் மனரீதியாக பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். 

முதல் மும்மாதம் :

கர்ப்பத்தின் மூன்று பருவங்களும்... கர்ப்பிணி சந்திக்கும் மாற்றங்களும்!

கர்ப்ப காலத்தின் முதல் 12 வாரங்கள் முதல் மும்மாதமாகக் கருதப்படுகிறது. இதில் கருவுருவதற்கு முந்தைய இரண்டு வாரங்களும் சேர்க்கப்படுகிறது. அதோடு இந்த பருவத்தில் பெண்ணின் இறுதி மாதவிடாயும் சேர்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான்  சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை கருப்பையை சென்றடைகிறது. முதல் மூன்று வாரத்தில் கர்பத்திற்கான சில அறிகுறிகள் தோன்றும் அவை..

காலை எழுந்தவுடன் அல்லது காலை உணவிற்கு பிறகு வாந்தி வருவது போன்ற உணர்வு தோன்றல்.

மலசிக்கல் போன்ற உணர்வு தோன்றுவது.

மயக்கம், தலை சுற்றல் அடிக்கடி வருவது.

மார்பகங்களில் சில மாற்றங்கள் தென்படுவது, அதிக வலி ஏற்படுவது.      

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றுவது.

புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.

புளிப்பான பொருட்களை சாப்பிட வேண்டும் என்னும் ஆசை தோன்றுவது.

எப்போதும் தூக்க களைப்பாக இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது.

மனதளவில் மிகுந்த அழுத்தத்துடன் காணப்படுவது.

திடீர் எடை குறைவு அல்லது எடை அதிகரித்தல்.


இரண்டாவது மும்மாதம்:

கர்ப்பத்தின் மூன்று பருவங்களும்... கர்ப்பிணி சந்திக்கும் மாற்றங்களும்!

கர்ப்பம் தரித்த 13 முதல் 28 வாரங்களை இரண்டாம் பருவமாக பகுக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் முதல் பருவத்திலிருந்து அனைத்து அறிகுறிகளும் மாறிவிடும். மாறாக உடல் எடை தேற ஆரம்பிக்கும். அதோடு கர்ப்பப்பை தனது இயல்பான அளவைவிட  20 மடங்கு வரை விரிவடையும் என மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.

இந்த பருவத்தில் கர்ப்பம் தரித்த பெண்ணின் தொப்புளில் இருந்து பிறப்புறுப்பு வரை வயிற்றில் வரி போன்ற தோற்றம் ஏற்படும்.
உடல் உறுப்புகள் பெரிதானது போன்ற தோற்றம் அளிக்கும்.
முலைக்காம்பைச் சுற்றி தோல் கறுப்பாதல்.
கால்களில் வீக்கம் ஏற்படும்.
முகத்தில் பருக்கள் தோன்றும்.

மூன்றாம் பருவம்:

கர்ப்பத்தின் மூன்று பருவங்களும்... கர்ப்பிணி சந்திக்கும் மாற்றங்களும்!

மூன்றாவது மும்மாதம் 29 - 40 வாரங்களாக பகுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், குழந்தை பிறப்பதற்கு ஆயத்தமாவதால், குழந்தை கீழ் நோக்கி திரும்ப துவங்கும். இதனால் கர்ப்பிணியின் வயிறு சரிய துவங்கும். அதோடு இந்த காலகட்டத்தில் குழந்தையின் எடை ஒவ்வொரு நாளும் 28 கிராம் வரை அதிகரிக்கும்.

இந்த பருவத்தில் அடிக்கடி முன் பிரசவலி என சொல்லப்படும் சூட்டு வலி தோன்றும்.

நெஞ்செரிச்சல், மூச்சு திணறுதல் போன்ற உபாதைகள் தோன்றும்.

மார்பகம் மென்மையாகி நீர் போன்ற வெள்ளை திரவம் சுரக்க ஆரம்பிக்கும்.

தொப்புள் வெளித்தள்ளுதல்

வயிற்றில் குழந்தையின் அசைவு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP