மருத்துவக்குணங்கள் நிறைந்த மணத்தக்காளி..!

எந்தக் கீரையாக இருந்தால் என்ன என்பதை விடுத்து அவ்வப்போது மணத்தக்காளிக் கீரையையும் சமைத்துவாருங்கள்…
 | 

மருத்துவக்குணங்கள் நிறைந்த மணத்தக்காளி..!

வயிற்றில் இருக்கும் புண்ணை வாய்ப்புண் காட்டிக் கொடுக்கும் என்று சொல்வார்கள். அத்தகைய வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணம் மணத்தக்காளி கீரைக்கு உண்டு. இலேசானகசப்பு சுவையுடைய மணத்தக்காளி கீரை சமைத்த பிறகு கசப்பை நீக்கிவிடும்.  நம் உடலில் உள்ள சிறுநீரையும், வியர்வையும் பெருக்கி உடலில் இருக்கும் கோழையை அகற்றி  உடலை கட்டுக் கோப்பாக வைக்கும். மணத்தக்காளி கீரையின் இலை, காய், பழம்,வேர் அனைத்துமே நம் உடலில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கவல்லது. மணத்தக்காளிப் பழம் கருப்பு, சிவப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும்.  வாரம் ஒரு முறையாவது மணத் தக்காளி இலையைச் சாறெடுத்து குடிக்கலாம். விலை குறைந்த சத்து நிறைந்த கீரை இது. 

வீடுகளிலும், வயல் ஓரங்களிலும் சாதாரணமாக காணப்படும் கீரை இது. மழைக்காலங்களில் கீரைகளைச் சமைக்க முடியாது. அப்போது மணத்தக் காளி வற்றலைக் காயவைத்து குழம்பு வைக்கலாம். தென்னிந்தியாவில் அதிக மாக மணத்தக்காளி கீரையைப் பயன்படுத்துவார்கள். நமது முன்னோர்கள்  காய்கறிகளை மட்டும் எடுக்காமல் வருடம் ஒருமுறை மணத்தக்காளி வற் றல், பூசணி வற்றல், சுண்டை வற்றல், மிளகாய் வற்றல், வெண்டை வற்றல், பாகல் வற்றல் போன்றவற்றைத் தயார்செய்து வைத்துக்கொள்வார்கள். வற்ற லிலும் மருத்துவக்குணங்கள் சிதையாமல் இருக்கிறது. மழைநாட்களில் இவை களை காரக்குழம்பாக்கி சத்துக்களைப் பெறுவார்கள்.

இயற்கை அள்ளித்தந்திருக்கும் பலவகை கீரைகளில் மணத்தக்காளியின் பங்கு அளவிடமுடியாதது... வாய்ப்புண் இருப்பவர்கள் அன்றாடம் மணத்தக் காளிக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண்கள் ஆறி குளிர்ச்சியாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு நல்ல தீர் வாக மணத்தக்காளி கீரை இருக்கும்.  செரிமான சக்தியை அதிகரிக்க செய்வ தால் ஜீரணம் ஆவதில் பிரச்னை இருப்பவர்கள் அவ்வப்போது மணத்தக்காளிக் கீரையைச் சேர்த்து வரலாம். பெண்களுக்கு கருப்பையின் பலம் அதிகரிப்பதில் இக்கீரை உதவுகிறது. தேமல் அதிகமிருந்தால்  மணத்தக்காளியைச் சாறாக்கி தேமலின் மீது  தடவி வந்தால்  நாளடைவில் தேமல் மறையும்... 

கோடைக்காலமான தற்போது மணத்தக்காளி காய்களை மொத்தமாக வாங்கி தண்ணீரில் அலசி வெயிலில் உலர்த்தி நன்றாக காயவையுங்கள். பிறகு காற் றுப்புகாத டப்பாக்களில் வைத்து  காரக்குழம்பு வைக்கும்போது  தாளிப்பில் சேருங்கள்... அருமையாக இருக்கும். கர்ப்பிணிகள் வாந்தி உணர்வை நீக்க... நல்லெண்ணெயில் மணத்தக்காளி வற்றலை வதக்கி சாப்பிட்டால் வாந்தி ஏற்படாது...  

எந்தக் கீரையாக இருந்தால் என்ன என்பதை விடுத்து அவ்வப்போது மணத்தக்காளிக் கீரையையும் சமைத்துவாருங்கள்… 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP